அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் விண்வெளிக்கு பயணம் செல்ல அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தால் இது விண்வெளியில் இருந்து வந்த நல்வாய்ப்பு என்று சொல்லலாம்.
பத்து கோடி ரூபாய் கொடுத்தாலும், கிடைக்காத விண்வெளிப் பயணத்திற்கு இலவசமாக செல்லும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும். உலகில் முதன்முதலாக இந்த அதிர்ஷ்ட வாய்ப்பை பெற்றிருக்கிறார் ஆன்டிகுவா மற்றும் பார்புடாவைச் சேர்ந்த ஒரு சுகாதார பயிற்சியாளர்.
விண்வெளிக்கு பயணம் செய்வதற்கான சுமார் பத்து லட்சம் டாலர் மதிப்புள்ள இரண்டு டிக்கெட்டுகளை வென்ற அந்த பயிற்சியாளர் தனது டீன் ஏஜ் மகளையும் விண்வெளி பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
Virgin Galactic unveils the first winner of a free trip to spacehttps://t.co/dQRNUgOOHf #Virgingalactic #RichardBranson @richardbranson pic.twitter.com/pkiUPTrP92
— Haleys Comet (@TheHaleysComet) November 26, 2021
சுகாதார பயிற்சியாளர் கெய்ஷா ஷாஹாஃப் மற்றும் அவரது மகள் விர்ஜின் கேலக்டிக் முதல் இலவச விண்வெளி சுற்றுலா பயணிகள் என்ற பெருமையை பெறுவார்கள். பிரிட்டனில் வசிக்கும் தனது 17 வயது மகள், நாசாவில் வேலை செய்ய வேண்டும் (Work in Nasa) என்று கனவு காண்கிறாள் என்று அதிர்ஷ்ட வாய்ப்பு பெற்ற ஷாஹாஃப் கூறினார்.
அறிவியல் மாணவியான தனது மகளின் லட்சியம் நாசாவில் வேலை செய்வது என்பதால், இது மகளுக்கான ஆகச் சிறந்த தனது பரிசாக இருக்கும் (Mothers gift to Daughter) என்றும், தனது மகளுடன் உலகின் எல்லையை கடக்க விரும்புவதாகவும் பாசமுள்ள அம்மா ஷாஹாஃப் தெரிவித்தார்.
நவம்பர் மாதத் தொடக்கத்தில், கரீபியனில் வசிக்கும் 44 வயதான ஷாஹாஃப் இந்த அதிர்ஷ்டத்தை பெற்றார்.
"நான் ஒரு ஜூம் இன்டர்வியூவில் இருக்கிறேன் என்று தோன்றியது. ரிச்சர்ட் பிரான்சன் உள்ளே வருவதைப் பார்த்ததும், நான் கத்த ஆரம்பித்தேன்! என்னால் நம்ப முடியவில்லை. விண்வெளிக்கு செல்வதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. மிகப்பெரிய சாகசத்தை செய்ய வேண்டும்" என்று ஷாஹாஃப் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
Omaze தளத்தில் விர்ஜின் கேலக்டிக் (Virgin Galactic on the Omaze platform) ஏற்பாடு செய்த நிதி திரட்டும் திட்டத்தில், சுகாதார பயிற்சியாளர் பரிசை வென்றார். இந்தத் திட்டத்தில் மூலம் விர்ஜின் கேலக்டிக் 1.7 மில்லியன் டாலர் தொகையை திரட்டியுள்ளது.
‘ஸ்பேஸ் ஃபார் ஹ்யூமனிட்டி’ என்ற அரசு சாரா குழுவுக்கு இந்தப் பணம் வழங்கப்பட உள்ளது. இது விண்வெளி தொடர்பான பரந்த அணுகல் தொடர்பான பணிகளை செய்யும் நிறுவனம் ஆகும். விர்ஜின் கேலக்டிக் விண்வெளி சுற்றுலாப் பயணிகளில் ஷாஹாஃப் இருப்பார், ஆனால் பயணிகளின் வரிசையில் அவரது இடம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
ALSO READ | திருமண பரிசாக மகளுக்கு மகளிர் விடுதியை கட்டி கொடுத்த தந்தை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR