சமூக ஊடகங்களில், 'மரண கிணறு சவால்' வீடியோ வைரலாகிறது. இந்த வீடியோவில், பைக் அல்லது காரில் ஸ்டண்ட்மேன் ஸ்டண்ட் செய்யவில்லை. ஆனால் இரண்டு-மூன்று பேர் தங்கள் கால்களால் ஸ்டண்ட் செய்வதைக் காணலாம்.
இது நாம் அனைவரும் கண்காட்சியில் ஸ்டண்ட்மேன் செய்து பார்த்திருக்கும் 'மரண கிணறு சவால்' தான். அங்கு மரணக் கிணற்றில், ஸ்டண்ட்மேன்கள் பைக் அல்லது காருடன் ஸ்டண்ட் செய்வதை ஆச்சரியமாக பார்த்திருக்கலாம்.
சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த மரணக் கிணறு சவாலை வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் இந்த மரணத்தின் கிணறு மிகவும் ஆபத்தானது. சிறு தவறு ஏற்பட்டாலு, ஸ்டண்ட்மேன் நேராக கிணற்றில் விழுந்து பலத்த காயம் ஏற்படும். அது மட்டுமா? கரணம் தவறினால் மரணம் என்று சொல்வதுபோல, உயிருக்கு எப்போதும் ஆபத்து நிறைந்த சவால் அது.
ALSO READ | இவர்தான் சிங்கப் பெண்ணோ? இது சீறும் சிங்கமல்ல! செல்லம் கொஞ்சும் மியாவ் lioness!
மரணத்தின் கிணறு சவால்
சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவில் (Viral Video), பைக் அல்லது காரில் ஸ்டண்ட்மேன் ஸ்டண்ட் செய்யவில்லை. ஆனால் இரண்டு-மூன்று பேர் தங்கள் கால்களால் ஸ்டண்ட் செய்வதைக் காணலாம்.
இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது ஒரு வகையான சவால், இதில் 'மரணக் கிணறு' போன்ற ஒரு இடம் தெரியும். இதில் கீழிருந்து மேல்நோக்கிச் செல்ல வேண்டும், மேலிருந்து கீழாகச் செல்ல வேண்டும்.
Need this momentum in life
@ Amazing Physics pic.twitter.com/5huxim1a1r
— Dr. M V Rao, IAS (@mvraoforindia) January 4, 2022
வீடியோவில் காணப்படும் நபர் இந்த ஆபத்தான சவாலை முடிப்பது போல் தெரிகிறது. இது தவிர, இரண்டு இளம் பெண்களும் இந்த சவாலை நிறைவேற்ற முயற்சிக்கிறார். அந்த நபர் தனது இரு நண்பர்களுடன் ஒரு இடத்தில் நிற்பதை வீடியோவில் காணலாம்.
'மரணக் கிணறு' போன்ற வடிவில் கீழிருந்து மேல் நோக்கி ஓடத் தொடங்குகிறார். 'மரணக் கிணற்றில்' ஒரு ஸ்டண்ட்மேன் தனது பைக் அல்லது காருடன் ஸ்டண்ட் செய்வது போல அந்த நபர் ஓடுவதை வீடியோவில் (Video Viral) காணலாம். இந்த ஸ்டண்ட் செய்வது கடினம்.
மரணக் கிணற்றில் ஸ்டண்ட் செய்வது மிகவும் கடினமான பணி என்று சொல்லலாம். இதற்கு வேகத்துடன் பேலன்ஸ் செய்வதும் அவசியம் ஆகும். சிறு தவறும் ஸ்டண்ட்மேனின் எலும்புகளை உடைத்துவிடும்.
சமநிலையில் சிறிது மாறுதல் ஏற்பட்டாலும், கீழே விழும் வாய்ப்புகள் அதிகம். இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் எம்வி ராவ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 'வாழ்க்கையில் இந்த வேகத்தின் தேவைதான்' என்று இந்த பதிவிற்கு அவர் தலைப்பிட்டுள்ளார்.
ALSO READ | கள்ளக்காதலியை ஹோட்டலுக்கு அழைத்து சென்ற கணவன்; மனைவி செய்த அதிரடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR