Viral Video: ராட்சஸ பாம்பை வேட்டையாட துடிக்கும் பருந்து; திகிலூட்டும் வீடியோ!

நிலத்தில் சிங்கங்களும், தண்ணீரில் முதலைகளும், வானில் பருந்துகளும் உலகின் மிக ஆபத்தான வேட்டை விலங்குகளாகவும் பறவைகளாகவும் கருதப்படுகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 18, 2022, 06:18 PM IST
  • வலிமையான விலங்குகளிடம் மாட்டிக் கொண்டால், தப்பிப்பது மிகவும் கடினம்.
  • ராட்சத பாம்புக்கும் பருந்துக்கும் இடையே சண்டை நடப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
  • சண்டை மிகவும் சுவாரஸ்யமானது.
Viral Video: ராட்சஸ பாம்பை வேட்டையாட துடிக்கும் பருந்து; திகிலூட்டும் வீடியோ! title=

இணையத்தில் எண்ணிலடங்கா வீடியோக்கள் அனுதினமும் பகிரப்படுகின்றன. அதில் விலங்குளுக்கு இடையிலான போராட்டம் தொடர்பான வீடியோக்கள் மிகவும் வைரலாகும். உயிரை காப்பாற்றிக் கொள்ள நடக்கும் போராட்டங்கள், சில சமயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன, சில சமயம் அதிர்ச்சிகளையும் கொடுக்கின்றன. சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அந்த வகையில், ராட்சஸ பாம்பிற்கும் பருந்துக்கும் இடையிலான போராட்டம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

நிலத்தில் சிங்கங்களும், தண்ணீரில் முதலைகளும், வானில் பருந்துகளும் உலகின் மிக ஆபத்தான வேட்டை விலங்குகளாகவும் பறவைகளாகவும் கருதப்படுகின்றன. வலிமையான இந்த விலங்குகளிடன் மாட்டிக் கொண்டால், தப்பிப்பது மிகவும் கடினம். ஆனால் ராட்சத பாம்புக்கும் பருந்துக்கும் இடையே சண்டை நடப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இந்த சண்டை மிகவும் சுவாரஸ்யமானது. வானில் பறக்கும் கழுகு, இரை தேடி ஆபத்தான பாம்பின் அருகில் வந்த அலட்சியமாக தாக்க நினைத்தது. பாம்புகளை கண்டால் படையும் நடுங்கும் என்றாலும், வைரலாகி வரும் இந்த காணொளியில் பருந்து ஒன்று ராட்ச பாம்பு ஒன்றை அச்சமின்றி தாக்கி இரையாக்க துடிப்பதைக் காணலாம்.

வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:

காணொளியில், பாம்பு தரையில் ஊர்ந்து செல்வதை பார்த்ததும் கழுகு உடனடியாக தரையில் இறங்கியதை காணமுடிகிறது. மிக பெரிய பாம்பை கண்டு பயப்படாமல் கழுகு முதலில் பாம்பை அதன் நகங்களில் பிடித்து தாக்க முயல்கிறது, ஆனால் பாம்பு ஆக்ரோஷமாகி உடனடியாக பதிலடி கொடுத்தது. இங்கே, பாம்பின் பதிலடியால், வேட்டைக்காரப் பருந்து பயந்து தான் போனது.

உண்மையில், திறந்தவெளியில் வெகுதொலைவில் அமர்ந்திருக்கும் பருந்து பாம்பை தாக்க கடுமையாக முயல்கிறது. ஆனால் பாம்பின் பதில் தாக்குதலை பார்த்து, மேலும் முன்னேற தைரியமில்லாமல், இரை செல்வதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தது. இதுவரை 21 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்ட டைம் 4 டியூப் என்ற சேனலில் இருந்து இந்த அதிர்ச்சி வீடியோ யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் பலவகைகளில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News