Viral Video: 'நமக்கு சோறு முக்கியம்; மணமகன் வெயிட் பண்ணலாம்’; அசத்தும் மணமகள்!

திருமணம் என்றாலே  சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் இருக்கும்.   இந்திய மணப்பெண்கள் பெரும்பாலும் மாப்பிள்ளை அழைப்பின் போதும், திருமண விழா தொடங்கும் வரையிலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 14, 2022, 01:31 PM IST
Viral Video: 'நமக்கு சோறு முக்கியம்; மணமகன் வெயிட் பண்ணலாம்’; அசத்தும் மணமகள்! title=

Viral video of Bride: திருமணம் என்றாலே  சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் இருக்கும்.   இந்திய மணப்பெண்கள் பெரும்பாலும் மாப்பிள்ளை அழைப்பின் போதும், திருமண விழா தொடங்கும் வரையிலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில், மணப்பெண்கள் பசியுடன் இருப்பார்கள். சிலர் உணவைத் தவிர்த்து விடுவார்கள். அதில் உணவுப் பிரியர்களான மணப்பெண்கள், சாப்பிடுவதற்கான அடிபடை உரிமையை விட்டுக் கொடுப்பதாக இல்லை, ஆம் உணவைத் தங்கள் முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக அவர்கள்  கருதுகின்றனர்.

அத்தகைய ஒரு வீடியோவில், ஒரு மணமகள் தனது திருமண நாளில் சீன உணவை ரசிப்பதைக் காணலாம். மணமகள் தனது திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாக்கில் நீர் வடியும் வகையிலான சீன சிற்றுண்டிகளை சாப்பிடுவதைக் காணலாம்! வீடியோவில், அவர் அதிக அளவில் நகைகளுடன் பழுப்பு நிற லெஹங்கா அணிந்துள்ளார். அவர் மேம்கப் கலையாமல் ஜாக்கிரதையாக உணவு உண்ணும் வீடியோ தற்போது மிகவும் வைரலாகி (Viral Video) வருகிறது.

ALSO READ | தனது அழகான மணமகளைப் பார்த்து 'out of control' ஆன மணமகன் செய்த காரியம்: வைரல் வீடியோ

மணமகள் வீடியோவைப் பகிர்ந்து, "மன்னிக்கவும் நான் உணவு மிகவும் விரும்புபவளாக இருக்கிறேன், என் மாமியார் கூட அதையே விரும்புகிறார்கள்" எனக் கூறுகிறார்.

வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ சமூக ஊடகத்தில் (Social Media) வைரலாகி உள்ளது, மேலும் வீடியோ அதிக அளவிலான பாராட்டையும் பெற்றுள்ளது. கருத்துப் பிரிவில் இதயம் மற்றும் காதல் ஈமோஜிகள் நிறைந்திருப்பதைப் பார்க்கலாம். ஒரு பயனர் எழுதினார், ”ஒரு பெண் தனது குறும்புதனத்தை இழக்கக் கூடாது. வேடிக்கையை தொடர வேண்டும்.. ஏன் மணமகள் இல்லை !!” மற்றொருவர் எழுதினார், "இது உங்கள் சொந்த திருமணம் ஆனால் திருமண உணவு தான் முதல் முன்னுரிமை."

ALSO READ | மணமகள் ஆடிய பாடலால் வெறுப்பான மணமகன் விவாகரத்து!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News