Watch Video: விண்வெளியில் விளையாடிய Jeff Bezos-ன் வைரல் வீடியோ

இந்த வார தொடக்கத்தில், உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விமானத்தில் விண்வெளிக்குச் சென்றார். இது உலகம் முழுதும் பேசப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 23, 2021, 03:20 PM IST
Watch Video: விண்வெளியில் விளையாடிய Jeff Bezos-ன் வைரல் வீடியோ title=

இந்த வார தொடக்கத்தில், உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விமானத்தில் விண்வெளிக்குச் சென்றார். இது உலகம் முழுதும் பேசப்பட்டது.

பல கட்ட ஆய்வுகள் மற்றும் நேர்காணல்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவுடன் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) விண்வெளிக்குச் சென்றார். அவரது சகோதரர் மார்க், நெதர்லாந்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர், ஆலிவர் டீமென் மற்றும் வாலி ஃபங்க் என்ற டெக்சாஸைச் சேர்ந்த 82 வயதான விமான நிபுணர் ஆகியோர் பெசோசுடன் சென்றனர்.

இந்த விண்வெளி பயணத்தின் (Space Travel) மூலம், டேமனும் ஃபங்கும் விண்வெளிக்கு பறந்த மிக இள வயது மற்றும் அதிக வயதுடைய நபர்களாக சாதனை படைத்தனர். இந்த பயணத்தின் துவக்கத்திலிருந்து தரையிறங்கும் வரை முழு அனுபவமும் 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. இதில் நான்கு நிமிடங்களில் ஜீரோ கிராவிடி, அதாவது பூஜ்ஜிய ஈர்ப்பு சக்தியுடன் இருந்தன.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeff Bezos (@jeffbezos)

ALSO READ: Jeff Bezos : இன்று ப்ளூ ஆரிஜன் விண்கலத்தில் விண்வெளிப்பயணம்

பூஸ்டரிலிருந்து காப்ஸ்யூல் பிரிந்த பிறகு, விண்கலத்தில் இருந்த குழுவினர் சில நிமிடங்கள் எடை குறைந்த தன்மையை உணர்ந்தனர். காப்ஸ்யூல் பின்னர் பாராசூட்டுகளின் உதவியுடன் பூமிக்குத் திரும்பியது. ரெட்ரோ-உந்துதல் முறையைப் பயன்படுத்தி ஒரு மென்மையான தரையிறக்கம் ஏற்பட்டது.

விண்வெளியில் எடையற்ற தன்மையை அனுபவித்த நால்வரும் தங்கள் வாழ்வின் மிக முக்கியமான மற்றும் பிரமிக்கத்தக்க நிமிடங்களைக் கழித்ததாகத் தெரிவித்தனர்.

இன்ஸ்டாகிராமில் (Instagram) பெசோஸ் பகிர்ந்த வீடியோவில், நால்வரும் ஒருவருக்கொருவர் பிங் பாங் பந்தைக் போட்டு மிக மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

ALSO READ: பூமியில் வெற்றிக் கொடி நாட்டிய ஜெப் பெசோஸின் விண்வெளிப் பயணம் விரைவில்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News