Video: இணையத்தில் வைரலாகும் #TSK DeletedScene2!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் வெளிவந்த திரைப்படம் "தானா சேர்ந்த கூட்டம்".

Last Updated : Jan 28, 2018, 03:43 PM IST
Video: இணையத்தில் வைரலாகும் #TSK DeletedScene2! title=

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் வெளிவந்த திரைப்படம் "தானா சேர்ந்த கூட்டம்".

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தில் இருந்து படத்தொகுப்பின் போது நீக்கப்பட்ட காட்சிகளை கடந்த ஜனவரி 22 படக்குழுவினர் வெளியிட்டது. தற்போது மற்றொரு வீடியோ காட்சியை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளது.

#TSKDeletedScene2 என்ற பெயரில் வெளியிடப்பட்ட இக்காட்சியானது, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த காட்சியானது, படத்தில் கடைசியில் இடம்பெற்றிருக்கும். அதில் சூர்யா, செந்தில், ரம்யாகிருஷ்ணன், கீர்த்திசுரேஷ், சத்யன் உள்ளிட்ட அனைவரும் வெளிநாடு செல்வார்கள். அப்போது கீர்த்திசுரேஷ் அதிகமாக நகை அணிந்து வருவார். அவர்களை அங்குள்ள அதிகாரிகள் தடுத்து நிறுத்துவார்கள். அதற்கு ரம்யாகருஷ்ணன் இவர் யார் தெரியுமா..? மகிழ்மதி நாடு தெரியுமா..? இவர் ராஜ வம்சம், ராணி சிவகாமி தேவி வாரிசு என்று பாகுபலியை குறிப்பிட்டு பேசுவார். அதன்பிறகு சாமர்த்தியமாக உள்ளே சென்ற பிறகு சூர்யா கீர்த்திசுரேஷிடம் சூர்யா உன் பெயர் என்னவென்று கேட்பது போன்ற காட்சியும் இருக்கும்.

தானா சேர்ந்த கூட்டம் - நீக்கப்பட்ட காட்சி 2...

 

Trending News