Watch: விக்னேஷ் சிவனை தோற்கடித்த நயன்தாரா....எதுல தெரியுமா?....

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா விளையாடிய `பேக்மேன் ஸ்மாஷ்’ வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 23, 2018, 05:02 PM IST
Watch: விக்னேஷ் சிவனை தோற்கடித்த நயன்தாரா....எதுல தெரியுமா?.... title=

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா விளையாடிய `பேக்மேன் ஸ்மாஷ்’ வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்...! 

தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் காதல் பற்றி கிசுகிசு-க்கள் வந்த வண்னம் உள்ளது. இதனை நிறுபிக்கும் வகையில் இவர்கள் இருவரும் அவ்வப்போது ஜோடியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். நானும் ரவுடிதான் படத்திற்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் தற்போது இந்த ஜோடி பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இப்புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.

இதை தொடர்ந்து தனது 34-வது பிறந்தநாளைக் கொண்டாடிய விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் வேகேஷன் சென்றுள்ளார். அப்போது இருவரும் பேக்மேன் ஸ்மாஷ் கேம் விளையாடியுள்ளனர். இந்த வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 1050 புள்ளிகளை நயன்தாரா பெற்றுள்ளார். 700 புள்ளிகளை பெற்ற விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் தோல்வி அடைந்துள்ளார்.

 

Trending News