அப்பா ஆகும் விராட் கோலி… ட்விட்டர் மூலம் அறிவித்த அனுஷ்கா ஷர்மா!

ஜனவரியில் தங்களுக்குக் குழந்தை பிறக்கப் போவதாக அனுஷ்கா ஷர்மா ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்..!

Last Updated : Aug 27, 2020, 12:27 PM IST
அப்பா ஆகும் விராட் கோலி… ட்விட்டர் மூலம் அறிவித்த அனுஷ்கா ஷர்மா! title=

ஜனவரியில் தங்களுக்குக் குழந்தை பிறக்கப் போவதாக அனுஷ்கா ஷர்மா ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்..!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, திரைப்பட நடிகை அனுஷ்கா ஷர்மாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கடைசியாக அவர், ஷாரூக்கானுடன் சீரோ படத்தில் நடித்தற்கு பிறகு அனுஷ்கா ஷர்மா திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இதை தொடர்ந்து, கோலி – அனுஷ்கா தம்பதியினருக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், வருகிற ஜனவரி மாதம் குழந்தை பிறக்கப் போவதாக அனுஷ்கா மற்றும் கோலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, கோலிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் கரீனா கபூர் – சயிஃப் அலிகான் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. தற்போது அனுஷ்கா ஷர்மா தன்னுடைய முதல் குழந்தை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News