Viral Video: சுறாவின் வாயில் சிக்கிய கேமிரா; பதிவான அற்புத காட்சிகள்

சுறா என்றழைக்கப்படும் சுறா மீன் வேகமாக நீந்த வல்ல, மிகப் பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும். கூர்மையான பல பற்களைக் கொண்டு இவை, சிறந்த மோப்பத் திறனைக் கொண்டுள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 25, 2022, 03:17 PM IST
Viral Video: சுறாவின் வாயில் சிக்கிய கேமிரா; பதிவான அற்புத காட்சிகள் title=

வைரல் வீடியோ: இணையத்தில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே மிகவும் வைரலாகின்றன. அதிலும் கடல் வாழ் உயிரினங்கள், காட்டு விலங்குகள் போன்றவை தொடர்பான வீடியோக்கள் என்றால், கேட்கவே வேண்டாம். மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் வீடியோக்கள் இவை. 

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவருக்கு சுறா மீன் வாய் மற்றும் தொண்டையின் உட்புறத்தை படம் பிடிக்கும் அற்புத வாய்ப்பு கிடைத்தது. சுறா ஒன்று 360 டிகிரி கேமராவை விழுங்கியதும், சுறாவின் வாய் மற்றும் தொண்டையின் கண்கவர் காட்சி பதிவு செய்யப்பட்டது.

திரைப்பட தயாரிப்பாளரும், சுற்றுசூழல் ஆர்வலுமான, ஜிமி டா கிட், மாலத்தீவில் ஒரு ஆவணப்படத்தை படமாக்கிக் கொண்டிருந்தபோது, அவரைச் சுற்றி வந்த சுறா ஒன்று, அவரது 360 டிகிரி கேமராவை வாயினால் கவ்வியது. சுறா பாய்ந்து வந்து கேமிராவை கடிப்பதை வீடியவின் காணலாம். 

மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!

வியப்பூட்டும் வகையிலான இந்த வைரல் வீடியோவில், சுறா வாயின் உட்புறம், அதன் பெரிய பற்கள், தொண்டைகள் மற்றும் செவுள்கள் தெளிவாகத் தெரியும். கேமரா சாப்பிடும் பொருள் அல்ல என்பதை சுறா உணர்ந்ததும், கடைசியில் அதை துப்பிவிட்டு நீந்திச் சென்றது. அதிர்ஷ்டவசமாக, கேமரா உபகரணங்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.

வைரல் ஆகி வரும் சுறா வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ வைரலாகிய நிலையில், சுறா மீனின் உட்புறம் எப்படி இருக்கிறது என்று மக்கள் மிக ஆர்வமாக இதனை பார்த்து பகிர்ந்து கொண்டனர்.  zimydakid என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இது பகிரப்பட்டுள்ளது. 

சுறா என்றழைக்கப்படும் சுறா மீன் வேகமாக நீந்த வல்ல, மிகப் பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும். கூர்மையான பல பற்களைக் கொண்டு இவை, சிறந்த மோப்பத் திறனைக் கொண்டுள்ளன. ஒரு துளி இரத்தம் இருந்தாலும் கூட, வெகு தொலைவில் இருந்தே முகர்ந்து கண்டறிந்து விடும். 

மேலும் படிக்க | அடக்கடவுளே! யாருமே கிடைக்கலையா... குளத்தில் முதலையுடன் கட்டி பிடித்து நடனம் ஆடும் நபர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News