காட்டுக்குள் சென்ற பெண்களை கட்டிப்பிடிச்ச கரடி: வைரல் வீடியோ

காட்டுக்குள் சுற்றுலா சென்ற பெண்களின் அருகில் சென்ற கரடி அவர்களை கட்டிபிடித்தால் அவர்கள் அலறினர். பின்னர் அதனிடம் இருந்து தப்பிக்க பெண்கள் எடுத்த முயற்சி தான் இப்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 28, 2023, 03:57 PM IST
  • கரடி வீடியோ இணையத்தில் வைரல்
  • காட்டில் சென்ற பெண்களை பிடித்தது
  • கட்டி பிடித்தபோது பதறிய பெண்கள்
காட்டுக்குள் சென்ற பெண்களை கட்டிப்பிடிச்ச கரடி: வைரல் வீடியோ title=

கரடிகளின் வீடியோ இணையத்தில் ஏராளமாக இருந்தாலும், சில வீடியோக்கள் எப்போதும் நெட்டிசன்களின் பேவரெட்டாக இருக்கும். அப்படியான ஒரு வீடியோவை இணையவாசிகள் வெகுவாக ரசித்து, டிரெண்டிங்கிலும் இடம்பிடித்திருக்கிறது. அதாவது வனப்பகுதிக்குள் சுற்றுலா சென்ற பெண்கள், இயற்கையின் பேரழகை ரசித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அவர்கள் சற்றும் எதிர்பார்க்காதபோது கரடி என்ட்ரி கொடுக்கிறது. அதனைப் பார்த்து ஷாக்கான பெண்கள், இப்போது என்னடா செய்வது? என பயத்தில் நின்றுக் கொண்டிருந்தனர். கரடியும் ஆபத்தான விலங்கு என்பதால் அவர்களுக்கு பயம் தலையின் உச்சிக்கு ஏறியது. 

மேலும் படிக்க | மெட்ரோ ரயிலில் குரங்கின் , போல் டான்ஸ், கூல் பயணம்: செம கியூட் வைரல் வீடியோ

கரடி வரும் என்றெல்லாம் அவர்கள் நினைக்கவில்லை. அப்போது கரடி அந்த பெண்களின் அருகில் சென்று கட்டியும் பிடித்துக் கொள்கிறது. இது அவர்களுக்கு இன்னும் பீதியை அதிகரிக்க, அதனிடம் இருந்து தப்பிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. குறிப்பாக வெகு அமைதியாக, எந்த ரியாக்ஷனும் அவர்கள் கொடுக்காமல் இருந்துவிட்டனர். அதுவே அவர்களுக்கு ஒரு பிள்ஸ் பாயிண்டாகவும் மாறியது. கரடி வருகிறதே என நினைத்து ஏதாவது சுற்றுலா பெண்கள் செய்ய  முனைந்திருந்தால் நிச்சயம் அந்த இடத்தில் அசம்பாவிதங்கள் கூட ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. கரடியின் தாக்குதலுக்கும் உள்ளாகியிருக்கலாம். ஆனால் அப்படியான எந்த சம்பவமும் நடைபெறவில்லை. அமைதியாக எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இருந்ததால் தப்பி பிழைத்தனர். 

வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும். அந்த இடத்தில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் எப்படியான சூழல் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் உடம்பு கூட சிலிர்த்துவிடும். வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் வில்லை. ஆனால் அவர்கள் சுற்றுலா பயணிகள் என்பது மட்டும் தெளிவாகிறது. விடுமுறையில் காட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். அது இப்படியொரு சம்பவத்தை கொண்ட சுற்றுலாவாக இருக்கும் என அவர்கள் நினைத்திருக்கவில்லை. இந்த வீடியோ தான் இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், கரடி நல்ல மூடில் இருந்ததால், அந்த பெண்கள் தப்பித்தார்கள் இல்லையென்றால் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருந்திருக்கும் என எச்சரித்துள்ளனர். வனப்பகுதிக்குள் செல்பவர்கள் உரிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், இல்லையென்றால் இப்படியான ஆபத்துகளை கட்டாயம் எதிர்கொள்ள நேரிடும். எல்லா நேரங்களும் நமக்கு சாதகமானவையாக இருந்துவிடாது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும் படிக்க | Viral Video: காணக் கிடைக்காத அதிசய காட்சி.. கூடு கட்டும் குருவி..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News