Viral Video: பூச்சிக்களை கபளீகரம் செய்யும் இரு தலை பல்லி!

Lizard Eating Insects: இரண்டு தலை பல்லியைப் பார்த்தால் மனதில் அச்சம் ஏற்படுவது நிச்சயம். தற்போது இரண்டு தலை மற்றும் வால் கொண்ட பல்லி பூச்சிகளை உண்ணும் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2023, 04:54 PM IST
  • பல்லி வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
  • சமூக வலைதளங்களில் அடிக்கடி விசித்திரமான விலங்குகளின் வீடியோக்களை பார்க்கு வாய்ப்பு கிடைக்கிறது.
  • சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ.
Viral Video: பூச்சிக்களை கபளீகரம் செய்யும் இரு தலை பல்லி! title=

இரண்டு தலை பல்லி வீடியோ: சமூக வலைதளங்களில் அடிக்கடி விசித்திரமான அல்லது வினோதமான விலங்குகளின் வீடியோக்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சில சமயம் அவை அதிர்ச்சியை கொடுப்பதாகவும், சில சமயம் மனதைத் தொடுவதாகவும் இருக்கும். விலங்குகளின் பல திகிலூட்டும் வீடியோக்கள் இணையத்தில் காணப்படுகின்றன. அந்த வகையில் இன்றைக்கு இரு தலை பல்லி ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது. இரண்டு தலை பல்லியைக் கேட்டிருக்கிறீர்களா அல்லது பார்த்திருக்கிறீர்களா? இரண்டு தலை பல்லியைப் பார்த்தால் மனதில் அச்சம் ஏற்படுவது நிச்சயம். தற்போது இரண்டு தலை மற்றும் வால் கொண்ட பல்லி பூச்சிகளை உண்ணும் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பூச்சியை உண்ணும் இரண்டு தலை பல்லி 

தற்போது பல்லி வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம், பல்லி தட்டில் அமர்ந்து தின்பண்டங்களை உண்கின்றன. சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சிலருக்கு திகிலூட்டுவதாகவும், சிலருக்கு வேடிக்கையாகவும் இருக்கும். UNILAD என்ற Instagram கணக்கு அதன் விசித்திரமான வீடியோக்களுக்கு பிரபலமானது. அந்த கணக்கில் சமீபத்தில் ஒரு பல்லியின் திகிலூட்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இரண்டு தலைகள் கொண்ட ஒரு சிறிய பல்லியைக் காணலாம். சமூக ஊடகங்களில் நாம் அடிக்கடி இரண்டு தலை பாம்புகள் அல்லது தவளைகளின் வீடியோக்களை பார்த்திருப்போம், ஆனால் இந்த முறை இந்த இரண்டு தலை பல்லியின் வீடியோ அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவை கீழே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by UNILAD (@unilad)

வீடியோவில், இரண்டு தலை பல்லி தின்பண்டங்களை சாப்பிடுவதைக் காணலாம். UNILAD இந்த வீடியோவிற்கு தலைப்பிடுகையில், "அவர்கள் இரட்டையர்களைப் போன்றவர்கள். இரு தலை விலங்குகளுக்கு பாலிசெபாலி என்ற நிலை உள்ளது. இந்த வார்த்தை கிரேக்க ஸ்டெம் பாலி (கிரேக்கம்: "πολύ") என்பதிலிருந்து பெறப்பட்டது. அதாவது பல என்ற பொருள்" என பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில், பல்லி ஒன்று தட்டில் அமர்ந்திருப்பது போல் உள்ளது. அதன் முன்னால் பல சிறிய பூச்சிகள் ஊர்ந்து செல்கின்றன, இரண்டு தலை பல்லி அந்தப் பூச்சிகளைத் தின்று கொண்டிருக்கிறது. பல்லிக்கு இரண்டு தலைகளும் இரண்டு வயிறுகளும்  உள்ள நிலையில், அதன் வால் ஒன்றாக சேர்ந்திருப்பதைக் காணலாம். இரண்டுக்கும் சாதாரண பல்லிகள் போல இரண்டு முன் கால்கள் உள்ளன. ஆனால் இரண்டுக்கு சேர்த்து மொத்தம் இரண்டு பின் கால்கள் மற்றும் ஒரு வால் உள்ளது.

மேலும் படிக்க | Viral Video: நீரை கிழித்து இரையை பிடிக்கும் ஆஸ்ப்ரே பறவை! கடலில் ஒரு மீன் வேட்டை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News