துள்ளி விளையாட மட்டுமல்ல; குத்து சண்டையும் தெரியும்... மான்களின் அசத்தல் வீடியோ!

விலங்குகளின் வேடிக்கையான சண்டை, உக்கிரமான சண்டை என பல வகை வீடியோக்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்களும் சமூக ஊடகங்களில் அதிகம் விரும்பி பார்க்கப்படுகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 7, 2022, 11:53 AM IST
  • விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன.
  • விலங்குகளின் குறும்பு செயல்களை பார்த்து ரசிப்பது என்பது பெரும்பாலானோருக்கு பிடித்த வேலையாக உள்ளது.
துள்ளி விளையாட மட்டுமல்ல; குத்து சண்டையும் தெரியும்... மான்களின் அசத்தல் வீடியோ! title=

விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. விலங்குகளின் வேடிக்கையான சண்டை, உக்கிரமான சண்டை என பல வகை வீடியோக்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்களும் சமூக ஊடகங்களில் அதிகம் விரும்பி பார்க்கப்படுகின்றன. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் பணியிடத்திலும் அதிக பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை அனுபவிக்கும் நிலையில், உண்மையில், இது போன்ற வீடியோக்கள் ஒரு நிவாரணமாக இருக்கிறது. இது போன்ற வீடியோக்களை பார்த்து நேரத்தை செலவிடுவதால், வாய் விட்டு சிரித்து மன அழுத்தத்தை குறைக்க முடிகிறது. விலங்குகள் எப்போது, ​​எப்படி நடந்து கொள்கின்றன என்று தெரியாமல் இருக்கும் நிலையில், அவற்றின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவதும்தான் இதுபோன்ற வீடியோக்கள் கவனத்தை ஈர்க்க முக்கிய காரணம். விலங்குகளின் குறும்பு செயல்களை பார்த்து ரசிப்பது என்பது பெரும்பாலானோருக்கு பிடித்த வேலையாக உள்ளது. அந்த வகையில், தற்போது இரண்டு மான்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மான் மிகவும் அமைதியான விலங்குகள். அவை தற்காப்புக்காகவே தவிர யாருக்கும் தீங்கு செய்யாது. மான் தாவரங்களை மட்டுமே உண்டு வாழக்க்கூடியவை. நார்ச்சத்து குறைவாக இருந்தாலும் புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை மான்கள் உண்கின்றன மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடியவை. உலகில் 43 வகையான மான்கள் உள்ளன. மான்கள் வெப்பமண்டல மழைக்காடுகள் வரை கடுமையான குளிர் காலநிலையில் காணப்படுகின்றன. மானின் கர்ப்ப காலம் 222 நாட்கள். மான்கள் முழு முதிர்ச்சி அடைய 5 முதல் 7 ஆண்டுகள் ஆகும். தற்போது இரண்டு மான்களுக்கு இடையே நடக்கும் சண்டையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கிய முதலை... திக் திக் நிமிடங்கள்

மான்களுக்கு இடையிலான குத்து சண்டையின் வைரல் வீடியோ:

 

 

இந்த காணொளியை IFS அதிகாரி சுஷாந்த் நந்தா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், இரண்டு மான்கள் இரண்டு கால்களில் நின்று கொண்டு ஒன்றுடன் ஒன்று குத்து சண்டையிடுவதைக் காணலாம். மான்களின் குத்துச்சண்டை என்ற தலைப்புடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இரு மான்களும் கால்களை தூக்கி சண்டையிடுவதை பார்த்தால், கங்காருக்கள் துள்ளிக் குதிப்பது போல் இருக்கிறது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News