பென்குயினை இரையாக்க துடித்த கடல் சிறுத்தை... தண்ணி காட்டிய கில்லாடி பென்குயின்!

கடலில் நடக்கும் ஒரு யுத்தம் தொடர்பான ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இது பென்வின் மற்றும் கடல் சிறுத்த இடையே நடக்கும் ஒரு போராட்டம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 21, 2023, 08:48 AM IST
  • பென்குவின் மற்றும் கடல் சிறுத்தை இடையே நடக்கும் ஒரு போராட்டம்.
  • பனி பிரதேசத்தில் கடலில் நடக்கும் யுத்தம் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
  • பென்குவின் தங்களது வாழ்நாளில் பாதியை நிலத்திலும் மீதியை கடலிலும் கழிக்கின்றன.
பென்குயினை இரையாக்க துடித்த கடல் சிறுத்தை...  தண்ணி காட்டிய கில்லாடி பென்குயின்! title=

இன்றைய நவீன யுகத்தில், சமூக ஊடகங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒரு ஊடகமாக ஆகிவிட்டது. மணிக்கணக்கில் சமூக ஊடகத்தில் நேரத்தை செலவிடும் பலரை நான் பார்த்திருப்போம். அன்றாட வாழ்க்கையின் முக்கிய அம்சமாகி போன சமூக ஊடகங்கள் மூலம் நான் எண்ணற்ற தகவல்களை அறிந்து கொள்கிறோம். சில சமயங்களில் அவை ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும், சில சமயங்களில் அவை அதிர்ச்சி ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடுகிறது. காண முடியாத சில அரிய காட்சிகளை காண இந்த ஊடகம் நமக்கு வழிவகை செய்கிறது. அந்த வகையில் கடலில் நடக்கும் ஒரு யுத்தம் தொடர்பான ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இது பென்குவின் மற்றும் கடல் சிறுத்தை இடையே நடக்கும் ஒரு போராட்டம்.

தேசத்தில் பனி பிரதேசத்தில் கடலில் நடக்கும் இந்த யுத்தம் தான் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காடு பகுதியானாலும் சரி கடல் பிரதேசமானாலும் சரி, அங்கே வலிமையான விலங்குகள், மான விலங்குகளை அடித்து இறையாக்கும். எனினும் சில சமயங்களில் வலிமையான விலங்குகளை தனது சாதுரியம் காரணமாக பலவீனமான விலங்குகள், அவற்றின் பிடியும் சிக்காமல் தப்பித்து கதைகளையும் காட்சிகளையும் பார்த்திருப்போம். வைரலாகும் இந்த வீடியோவும் அப்படிப்பட்ட ஒரு காட்சியை உங்கள் முன் கொண்டு வந்துள்ளது.

வைரல் ஆகி வரும் அந்த வீடியோவில், கடல் சிறுத்தை ஒன்று பென்குவின் பறவையை நீரில் வேட்டையாடி இரையாக்க துடித்து அதனைப் பிடித்து விடுகிறது. ஆனால் புத்திசாலியான அந்த பென்குவின் பறவை கடல் சிறுத்தையை ஏமாற்றிவிட்டு தப்பி செல்கிறது. பென்குவின் பறவை தான் இறந்தது போல் நடித்து, ஒரு கணம் கடல் சிறுத்தையின் கண்ணில் மண்ணை தூவி வேகமாக அம்பைப் போல் சீரி, தண்ணீரில் நீந்தி பத்திரமாக கரை ஏறி விடுகிறது.

வைரலாகும் இந்த வீடியோவை கீழே காணலாம்:

 

 

வல்லவன் வாழ்வான் என்ற விதி விலங்குகளின் வாழ்க்கையில் சரியாக பொருந்தும். வல்லவன் என்பது உடலில் வலிமை பெற்றவன் மட்டுமல்ல, அறிவில் வல்லமையாக இருப்பவனும் வல்லவன் தான். இதைத்தான் வைரல் வீடியோ நமக்கு உணர்த்துகிறது. பென்குவின் நீரில் வாழும் பறவை. கடுமையான பணி பிரதேசங்களில் இவை காணப்படும். ஆனால் இவை பறக்காது. அதன் துடுப்பு போன்று இரு இறகுகள் மூலம் கடலில் மீண்டும் திறன் பெற்றவை. இவை தங்களது வாழ்நாளில் பாதியை நிலத்திலும் மீதியை கடலிலும் கழிக்கின்றன. இவை நீரில் மிக விரைவாக மீண்டும் திறன் பெற்றவை. இவை நீந்துவதை பார்க்கும் போது பறவைகள் பறப்பதைப் போலவே இருக்கும். பென்குயின்கள் நீந்தும் போது அவற்றின் பின்னால் வரிசையாக நீர் குமிழ்கள் வருவதை காணலாம். பார்ப்பதற்கு மிக அழகாக உள்ள பென்குயின் பறவையின் நீந்தும் வேகம் 12 கிலோமீட்டர் வரை என்ற அளவில் இருக்கும்.  சில சமயங்களில் இவை மணிக்கு 27 கிலோமீட்டர் வரை கூட மீண்டும் திறன் பெற்றவை.

மேலும் படிக்க | Viral Video: தோகை விரித்து ஆடி காதலியை கவர போராடும் ஆண் மயில்... மசியாத பெண் மயில்!

கடல் சிறுத்தை பாலூட்டி இனத்தை சேர்ந்தவை.  கடுமையான பணி பிரதேசங்களில் வசிக்கும் இவை மிகக் கூர்மையான பற்களை கொண்டவை. நன்கு வளர்ந்த கடல் சிறுத்தைகள் எட்டு அடி முதல் 11 அடி வரையிலான நீளத்தில் இருக்கும்.

மேலும் படிக்க | Viral Video: சிங்கம் வேட்டையாடி பார்த்திருப்பீங்க... ஜாலியா பந்து விளையாடி பார்த்திருக்கீங்களா

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

Trending News