'திடீரென அசைந்த மலை' இணையத்தில் பரவும் வீடியோ வைரல்

மலை ஒன்று தானாக நகரும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வியப்பின் உச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் அதன் பின்னணி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 10, 2023, 12:42 PM IST
  • இந்த இடத்தில் நடந்த ஓர் அதிசயத்தைப் பற்றி தான் இன்று நாம் உள்ளோம்.
  • இன்றைய வைரல் வீடியோ.
'திடீரென அசைந்த மலை' இணையத்தில் பரவும் வீடியோ வைரல் title=

பூமியில் உள்ள பல இடங்கள் மனிதர்களுக்கு அதிசயத்தை ஆச்சரியத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கும். அது எப்படி உருவானது என்ற மர்மம் மட்டும் பல ஆண்டுகளாக விவரிக்க படாமலே தொடரும். அப்படியான ஒரு இடத்தில் நடந்த வைதிறல் வீடியோ பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இராட்சசப் படுகை என்று கூறப்படும் Giant's Causeway அயர்லாந்து நாட்டில் வடகிழக்கு கடற்கரையின் ஓரம் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இங்கு 40,000 கருங்கற்கள் ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டு அடுக்குகளாகக் காணப்படுகிறது. இது பண்டையகாலத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் உருவாகியிருக்கலாம் என்று கூறுகிறார்கள். 1986 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ இந்த பகுதியை உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது. அதே நேரத்தில் வடக்கு அயர்லாந்து சுற்றுச்சூழல் துறை 1987 இல் தேசிய இயற்கை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது. ரேடியோ டைம்ஸ் வாசகர்களின் 2005 வாக்கெடுப்பில், இந்த அமைப்பு ஐக்கிய இராச்சியத்தின் நான்காவது மிகப்பெரிய இயற்கை அதிசயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

புராணங்கங்களை நம்புபவர்கள் ஸ்காட்லாந்தில் பென்னன்டோனர் மற்றும் அயர்லாந்தில் உள்ள ஃபின் மெக்கூல் ஆகிய இரண்டு ராட்சதர்களுக்கு இடையிலான போட்டியின் விளைவாக இந்த தரைப்பாதை உருவானதாக சொல்கிறார்கள். ஒவ்வொன்றும் பொதுவாக ஐந்து முதல் ஏழு ஒழுங்கற்ற பக்கங்களைக் கொண்டவை. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு குன்றின் முகங்களுக்கு வெளியே அவை கடலுக்குள் ஊர்ந்து செல்வது போல் உள்ளன. இத்தளம் சுமார் 200 ஏக்கர் (80 ஹெக்டேர்) வரை விரிவாக்கப்பட்டது.

மேலும் படிக்க | ’நண்பா ஹெல்ப் மீ’ சிப்ஸ் திருட குரங்குக்கு உதவும் நாய்: பலே கில்லாடிங்கப்பா..! வைரல் வீடியோ

இந்த நிலையில் இந்த இடத்தில் நடந்த ஓர் அதிசயத்தைப் பற்றி தான் இன்று நாம் உள்ளோம். நீங்கள் மலை தானாக நகர்ந்து இதுவரை பார்த்திருக்கிறீர்களா? ஆனால் அப்படியொரு வீடியோ இப்போது இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது. உலகில் இருக்கும் உயிரினங்களான மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்டவை தானாகவே நடக்கும். இதனைக் கண்களால் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு மலை நகர்வதை பார்த்திருக்கிறீர்களா?. பல அரிய அதிசயங்கள் இருக்கும் இந்த பூமியில் இதுவும் ஒரு அதியமாகும்.

ஏனென்றால், உலகில் இருக்கும் அத்தனை அதியசங்களையும், நிகழ்வுகளையும் யாராலும் பார்க்க இயலாது. ஒரு சில விஷயங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டவை மட்டுமே பெரும்பாலானோர் பார்க்கும் வாய்ப்பு கிட்டுகிறது. அந்தவகையில் அடுக்கு பாறை வடிவில் இருக்கும் மலை நகரும் வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. 

வீடியோவை இங்கே காணுங்கள்: 

பார்ப்பவர்களை அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது. இந்த வீடியோ யூடியூப் பக்கத்தில் பகிறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஏற்கனவே 13.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் பலர் வியந்து போய் தங்களின் கருத்து தெரிவித்துள்ளனர்.

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ’வாத்தியாரு எங்க போய்ட்டாரு’ கோபமாக இந்தி கற்றுக் கொடுக்கும் சிறுவனின் மைண்ட்வாய்ஸ் - வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News