Viral Video: கில்லாடி கார் ட்ரைவருக்கு ஒரு ‘ஓ’ போடுங்க... !

ஆனந்த் மஹிந்திரா X இல் பகிர்ந்த வைரலான வீடியோ, கார் ஓட்டுநரில் மிக சாதுர்யமான ஸ்டெண்ட் இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 17, 2023, 01:00 PM IST
Viral Video: கில்லாடி கார் ட்ரைவருக்கு ஒரு ‘ஓ’ போடுங்க... ! title=

Viral Video: மஹிந்திரா & மஹிந்திரா குழுமத் தலைவர், ஆனந்த் மஹிந்திரா சமூக ஊடகத்தில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் பயனர். தனனி கவர்ந்த, ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பல்வேறு விஷயங்களை தவறாமல் சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் உள்ளவர். சில நேரங்களில் இந்த காட்சிகள் வைரல் வீடியோக்கள் அல்லது புகைப்படங்களுடன் தொடர்புடையவையாக இருக்கும். அவரது நிபுணத்துவ கருத்து மற்றும் சுவாரஸ்யமான நுண்ணறிவு திறன், பல்வேறு விஷயங்களில் மற்ற சமூக ஊடக பயனர்களுடனான தொடர்புகள் காரணமாக, X தளத்தில், 10.9 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளார். இது அவரை சமூக ஊடகத் தளத்தில் மிகவும் பிரபலமான இந்திய வணிகர்களில் ஒருவராக ஆக்குகிறது.

ஆனந்த் மஹிந்திரா தனது சமீபத்திய பதிவில், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒரு ஓட்டுனர் தந்திரமாக கையாளும் வீடியோ (Viral Video) ஒன்றை காட்டுகிறது. குறுகிய சாலையில் இரண்டு கார்கள் எதிரெதிரே நிற்பதைக் காட்டுவதன் மூலம் வீடியோ தொடங்குகிறது. இந்நிலையில், ஓட்டுனர்கள் பின்வாங்காமல் வெளியேற முடியாத நிலை உள்ளது. இருப்பினும், ஒரு கருப்பு செடானில் திறமையான டிரைவர். மிக லாவகமான காரை சுவற்றின் மீது ஏற்றி தனது காரை வெளியே கொண்டு வந்து விடுகிறார். காரின் இரண்டு சக்கரங்களை பக்கவாட்டில் உள்ள சுவரில் ஏறச் செய்து சிறிய இடைவெளியில் ஓட்டி அதைச் செய்கிறார்.

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

சமூக ஊடகங்களில் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ 700 ஆயிரம் பார்வைகள், 9 ஆயிரம் விருப்பங்கள் மற்றும் ஏராளமான கருத்துகளைக் குவித்துள்ளது. இருப்பினும், இந்த எண்ணிக்கைகள் நேரம் ஆக ஆக அதிகரித்து வருகின்றன. பல சமூக ஊடக பயனர்கள் ஓட்டுநரின் திறமையைப் பாராட்டினர், மற்றவர்கள் அதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டனர்.

கருத்துப் பிரிவில் உள்ள பயனர்களில் ஒருவர், "இது உண்மையிலேயே பைத்தியகாரத்தனமான நடவடிக்கை. இது மிகவும் ஆபத்தானது." அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றவர், “வாட்.. காரை சேதப்படுத்தாமல் இதை எப்படி செய்தார்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே போன்று, சில நாட்களுக்கு முன்பாக, மிக குறுகிய மலை பாதையில், யூ டர்ன் எடுக்கும் கார் ஒன்றின் வீடியோ மிகவும் வைரலாகியது. இந்த வீடியோவில் நீங்கள் ஒரு பக்கம் மலையையும் மறுபுறம் ஆழமான பள்ளத்தாக்கையும் காணலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி U turn எடுப்பது. நினைத்து பார்க்கவே முடியாத காரியம் அல்லவா.... ஆனால் இவ்வளவு சிறிய ரோட்டிலும் சளைக்காமல் காரை மலையில் முன்னும் பின்னுமாக ஓட்டி காரை திருப்புகிறார் இந்த டிரைவர். இம்முறை சிறு தவறு செய்தாலும், காருடன் நேராக பள்ளத்தாக்கில் விழலாம் என்ற நிலையில், அவரது சாதுர்யம் நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. நமக்கு பார்த்தலே ஒரு திரில்லர் படத்தை பார்ப்பது போல் கதி கலங்குகிறது. வீடியோவில் ஒரு கட்டத்தில், காரின் பின்புற டயர் முழுவதும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை இருப்பதை நீங்கள் காணலாம். நாம், அவ்வளவு தான், என நினைத்திருப்போம். ஆனால் டிரைவர் கடைசியில் மிக சிறப்பான முறையில் யு-டர்ன் எடுத்து காட்டுகிறார். இந்த பரபரப்பான காணொளியை பார்க்கும் போது (Viral Video) நமக்கு மூச்சே நின்று விடும் போல் உள்ள வீடியோவை கீழே காணும் இணைப்பில் கண்டு மகிழலாம்.

மேலும் படிக்க | Viral Video: யூ டர்ன் எடுக்கிற இடமா இது.... ஆனாலும் ட்ரைவருக்கு ஒரு சல்யூட்...!!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

Trending News