கில்லாடி கிளிகள்... ஒலிம்பிக் போட்டிக்கு இவற்றை அனுப்பினால் பதக்கம் நிச்சயம்!

கிளிகள் நம் நாட்டில் மிகவும் பொதுவாக  காணப்படும் பறவைகள். அதிலும், பச்சை நிற கிளிகள் பொதுவாக நம் நாட்டில் அதிகம் காணப்படுகின்றன. அவை சொன்னதை திரும்ப சொல்லும் திறன் படைத்தவை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 5, 2023, 04:50 PM IST
  • கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை.
  • பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும்.
  • நாம் பேசுவதை திருப்பிச் சொல்லும் திறன் பெற்றவை.
கில்லாடி கிளிகள்... ஒலிம்பிக் போட்டிக்கு  இவற்றை அனுப்பினால் பதக்கம் நிச்சயம்! title=

சமூக ஊடகங்களில் தின தினம் பெரும்பாலானோர், தங்கள் நேரத்தை வீடியோக்களைப் பார்ப்பதிலும், ட்ரோல்களைப் படிப்பதிலும் செலவிடுகிறார்கள். மக்கள் தனிமை, கவலை மற்றும் மன அழுத்தத்தை போக்கும் நேரம் இது. தற்காலிக நிவாரணம் பெற இது போன்ற வீடியோக்கள் மக்களுக்கு உதவுகின்றன. அதனால் தான் தினமும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களில் நகைச்சுவை படங்கள், இன்ஸ்டாகிராம் ரீல்கள், யூடியூப் வீடியோக்கள் என பல மிகவும் வைரலாகி மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது. இதுபோன்ற வீடியோக்களில், விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்களில் பெரும்பாலானோர் சிறப்பு ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் கூடைபந்து விளையாடும் கிளிகளின் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கிளிகள் நம் நாட்டில் மிகவும் பொதுவாக  காணப்படும் பறவைகள். அதிலும், பச்சை நிற கிளிகள் பொதுவாக நம் நாட்டில் அதிகம் காணப்படுகின்றன. அவை சொன்னதை திரும்ப சொல்லும் திறன் படைத்தவை.  ஆனால் நீலம், சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பல வண்ணங்களில் கிளிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. தற்போது வைரலாகும் கிளி வீடியோ ஒன்றில் வைராலாகும் வீடியோவில், கிளிகள் இணைந்து கூடைப்பந்து விளையாடுவதைக் காணலாம். 

வைரலாகும் கிளி வீடியோவை இங்கே காணலாம்:

கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும். நாம் பேசுவதை திருப்பிச் சொல்லும் திறன் பெற்றவை. மனிதர்களின் பேச்சைப் புரிந்து கொள்வதில் சிறப்பு வாய்ந்தவை. கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள் என கூறப்படுகிறது . கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. விதைகளும், பழங்களும், கொட்டைகளும், பூக்களும், மொட்டுக்களும் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களுமே கிளிகளின் முக்கிய உணவு. 

சில நாட்களுக்கு மின் கழுகின் மீன் வேட்டை ஒன்று மிகவும் வைரலாகியது. வைரலாகிய அந்த வீடியோவில், கழுகு ஒன்று, தண்ணீரில் சீறிப்பாய்ந்து, மிக அழகாக வேட்டையாடுகிறது. நொடியில் அதை பிடித்து விடும் கழுகு, தண்ணீரில் பாய்ந்து வேட்டையாடிய மீனை மிகவும் கெட்டியாக வலுமாக, தனது அலகுகளால் பிடித்துக் கொள்கிறது. நீரில் வேட்டையாடிய மீனை, தாமதிக்காமல் நொடி பொழுதில் வானில், மீன் உயிருடன் இருக்கும் போதே, ருசி பார்க்கும் அந்த கழுகின் ஆற்றலை கண்டு இணையவாசிகள் வியந்துள்ளனர். அதனை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

மேலும் படிக்க | Viral Video: வியக்க வைக்கும் ‘சூப்பர் ஸ்டார் கழுகு’... நீரில் மீன் வேட்டை... நடுவானில் மீன் விருந்து..!!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News