பச்சிளம் குழந்தை போல் உற்சாக குளியல் போடும் குரங்குக்குட்டி! வைரல் வீடியோ!

ஓராங்குட்டான் வகை குரங்கு குட்டி ஒன்றை குழந்தையை குளிப்பாட்டுவதை போல குளிக்கவைக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 5, 2022, 06:35 PM IST
  • குரங்கு குளிக்கும் வீடியோ வைரல்.
  • குழந்தைகளை போல அழகாக குளிப்பாட்டும் பெண்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
பச்சிளம் குழந்தை போல் உற்சாக குளியல் போடும் குரங்குக்குட்டி! வைரல் வீடியோ! title=

சமீப காலமாக நாய், பூனை, குரங்கு போன்றவற்றின் வீடியோக்கள் இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது.  அந்த வகையில் தற்போது ஒரு குட்டி ஓராங்குட்டானின் குளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  மனித குரங்குகளில் ஆசிய இனத்தை சேர்த்த குரங்கு வகை தான் ஓராங்குட்டான்.  மற்ற வகை குரங்குகளை காட்டிலும் இந்த வகை குரங்குகள் நீண்ட கைகளை கொண்டுள்ளது.  இந்த வகை குரங்கினங்கள் இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற இடங்களில் இருந்து தோன்றியதாக வரலாற்று செய்திகள் கூறுகிறது.  குழந்தைகளை குளிக்க வைப்பதை போல ஓராங்குட்டான் குரங்கு குட்டியை ஒரு பெண்மணி குளிக்க வைக்கிறார், இது சமூக வலைத்தளத்தில் பலரின் கவனங்களை ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க | Viral Video: மரணம் நெருங்குவதை அறியாமல் பாம்பிடம் சிக்கி பலியான எலி 

தற்போது இந்த வைரல் வீடியோவானது ட்விட்டர் பக்கத்தில் பைடெங்பைடன் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அதில் குளியலறையில் ஒரு ஓராங்குட்டான் இன குரங்குக்குட்டியும் அதனருகில் ஒரு பெண்ணும் இருப்பதை காணலாம்.  அந்த பெண் அருகில் டப்பில் வைத்துள்ள நீரை எடுத்து குரங்கின் மீது ஊற்றி குளிப்பாட்டுகிறார், பின்னர் அந்த குட்டி குரங்குக்கு சோப்பு போட்டு நுரை வரும்வரை தேய்த்து குளிப்பாட்டுகிறார்.  அந்த குரங்கு குட்டியும், ஒரு குழந்தை தாயிடம் சிணுங்குவதை போன்று செய்கிறது.  இந்த காட்சி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

 

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  இந்த வீடியோவுடன் ஓராங்குட்டான் குட்டி குளிக்கிறது என்கிற கேப்ஷனும் சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது.  இந்த வீடியோவிற்கு பலரும் ஹார்ட் எமோஜிகளை கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | இறந்த செல்ல நாய்க்கு கோவில் கட்டிய முதியவர்: இணையவாசிகளை இளக வைத்த நிகழ்வு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News