கடல்வாழ் உயிரினங்களில் புத்திசாலித்தனமான உயிரினமாக ஆக்டோபஸ்கள் கருதப்படுகின்றன. அபார நினைவாற்றலை கொண்டுள்ள ஆக்டோபஸ்களால் மனித முகங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ய்ச்சி வல்லுநர்கள் கூறுகின்றனர். அதோடு ஆக்டோபஸ்களுக்கு மூன்று இதயங்களும் 9 மூளைகளும் உள்ளன. 9 மூளைகளில் எட்டு மூளைகள் எட்டு கைகளிலும் உள்ளது.
அக்டோபஸ்கள் சிற்பிகள் வகை உயிரினமாகும். ஆனால் பரிணாம வளர்ச்சியினால் ஆக்டோபஸ்கள் அவற்றின் மேலோட்டை இழந்துவிட்டது. சில ஆக்டோபஸ்களுக்கு மனிதர்களை கொல்லும் அளவுக்கு விஷத்தைக் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட அக்டோபஸ் கைகளில் சிக்கிய ஒரு சுறாவின் நிலை என்ன ஆகும் என்பதை காட்டும் ஒரு வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது.
அதிக விஷம் கொண்ட அக்டோபஸ் கடித்தால் கடிவாங்கிய நபருக்கு கடலிலேயே ஜன சமாதி நிச்சயம் என்ர நிலையில் ஒரு சுறா ஒன்று அக்பாஸிடம் சிக்கியது. சுறா என்றழைக்கப்படும் சுறா மீன் வேகமாக நீந்த வல்ல, பல பற்களைக் கொண்டுள்ள பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும். 22 சென்டி மீட்டர் நீளம் உள்ள பிக்மி சுறா முதல் 12 மீட்டர் நீளம் உள்ள திமிங்கலச் சுறா வரை பல வகைகள் உள்ளன.
மேலும் படிக்க | பைப்பை விழுங்கிய பாம்பு, பக்குவமாய் எடுத்த நபர்: வியப்பூட்டும் வைரல் வீடியோ
ஆக்டோபாஸுடன் சுறா நடத்தும் போராட்டத்தின் வைரல் வீடியோ
Octopus meets a Swell shark pic.twitter.com/IrqUiW7yei
— Terrifying Nature (@TerrifyingNatur) September 25, 2024
கடல் பரப்பில், நீந்தி சென்று கொண்டிருந்த சுறாவை, அகோபஸ் ஒன்று வளைத்து பிடிக்கிறது. சில நேர போராட்டத்திற்கு பின் சுறா விலகிச் செல்கிறது. பார்க்கும் நமக்கு இனி சுறா கதி என்ன என சில நேரம் பதற வைக்கிறது. சுற்றி இருக்கும் மீன்களும் அதனை திகிலோடு பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.
அக்டோபஸ் குறித்த மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள்
1. ஆக்டோபஸுகளுக்கு எலும்புகள் இல்லை எனவே ஒரு நாணயம் அளவில் உள்ள துவாரத்தில் கூட புகுந்து வந்துவிடும்
2. ஆக்டோபஸ்கள் அவற்றின் தோற்றத்தை 30 மில்லி செகண்டில் மாற்றிக் கொள்ளும். அவற்றின் தோலில் காணப்படும் சிறிய நிறமி பைகளை விரிவாக்குவதன் மூலம் அவை நிறங்களை மாற்றுகின்றன.
3. ஆக்டோபஸ்களுக்கு எட்டு கைகள் இருக்கின்றன இந்த கைகள் முழுவதும் சக்ஷன் கப்புகள் உள்ளத. இரையை நழுவ விடாமல் பிடித்துக் கொள்ள இவை உதவுகின்றன.
(பொறுப்பு துறப்பு: சமூக ஊடகங்களில் வந்த இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கில் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. இதைப் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.)
மேலும் படிக்க | ஆற்று நீரில் கிங்ஃபிஷர் நடத்திய மீன் வேட்டை... வியந்து போன நெட்டிசன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ