Viral Video: ஆக்டோபஸ் செய்யும் சாகசம்... கடலில் கூலாக ஜாக்கிங் போகும் அரிய காட்சி

வன வாழ்க்கையைப் போலவே, கடல் வாழ்க்கையும் சுவாரஸ்யங்கள் நிறைந்தது. அந்த வகையில், குறும்புத்தனம் நிறைந்த  அக்டோபஸ் ஒன்று, கூலாக ஜாகிங் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 17, 2024, 04:43 PM IST
  • சமூக ஊடகங்கள் காணக்கிடைக்காத அரிய தகவல்களை கொடுக்கும் அரிய ஒரு தளமாக மாறிவிட்டன.
  • ஆக்டோபஸின் கைகளில்தான் பெரும்பாலான மூளையணுக்கள் உள்ளன.
  • ஆக்டோபஸ் மீன், மிக தெளிவான கடல் நீரில் ஜாகிங் செல்வதைக் காணலாம்.
Viral Video: ஆக்டோபஸ் செய்யும் சாகசம்... கடலில் கூலாக ஜாக்கிங் போகும் அரிய காட்சி title=

Viral Video: சமூக ஊடகங்களில் காணக் கிடைக்காத பல அற்புதமான வீடியோக்களை நீங்கள் பார்க்கலாம். இணைய பயனர்கள் பார்த்து ஆச்சரியப்படும் பல வீடியோக்கள் தினமும் வைரலாகின்றன. இந்த வரிசையில், சமீபத்தில் ஒரு வீடியோ மக்களின் இதயங்களை வென்றுள்ளது. இந்த வீடியோவில் நீங்கள் இதற்கு முன் பார்த்திருக்காத சம்பவம் ஒன்றை பார்க்கலாம். மிகவும் விளையாட்டுத்தனமான, குறும்புத்தனமான ஆக்டோபஸ் மீன், மிக தெளிவான கடல் நீரில் ஜாகிங் செல்வதைக் காணலாம்

வன வாழ்க்கையைப் போலவே, கடல் வாழ்க்கையும் சுவாரஸ்யங்கள் நிறைந்தது. அந்த வகையில், அக்டோபஸ் ஒன்று, கூலாக ஜாகிங் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. குறும்புத்தனம் நிறைந்த ஆக்டோபஸ் மிகவும் பலவகையில் ஆச்சரியப்படுத்தும் தன்மை கொண்டவை. அதன் உடல் முழுவதும் மூளையணுக்கள் உள்ளன. புத்திகூர்மை நிறைந்த ஆக்டோபஸின் கைகளில்தான் பெரும்பாலான மூளையணுக்கள் உள்ளன. ஒரு சராசரி ஆக்டோபசுக்கு 500 மில்லியன் நியூரான்கள் அல்லது மூளையணுக்கள் உள்ளன என உயிரியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வைரலாகும் அக்டோபஸ் வீடியோவை கீழே காணலாம்:

வைரலாகும் பாம்பு தேள் சண்டை வீடியோ

சமீபத்தில் வைரலான மற்றொரு வீடியோவில்,  7 அடி நீளம் கொண்ட பாம்பு 15 சென்டிமீட்டர் நீளமுள்ள தேளை சமாளிக்க முடியாமல் அவஸ்தை படுவதை பார்க்க ஆச்சரியமாக உள்ளது. தேள் தனது கொடுக்கினால் ஏழு அடி நீளமுள்ள பாம்பை தனது பிடியில் வைத்திருப்பதைக் காணலாம். தேளின் கொடுக்கின் முன்னால் பாம்பால் எதுவும் செய்ய முடியவில்லை. வைரலாகும் பாம்பு தேள் சண்டை வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

மேலும் படிக்க | சைசெல்லாம் ஒரு மேட்டரே இல்ல... 7 அடி பாம்பை பந்தாடிய 15 செ.மீ தேள்: தூள் கிளப்பும் வைரல் வீடியோ

இன்றைய காலக்கட்டத்தில், சமூக ஊடகங்கள் காணக்கிடைக்காத அரிய தகவல்களை கொடுக்கும் அரிய ஒரு தளமாக மாறிவிட்டன. பல நேரங்களில் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத காட்சிகளை இங்கே காணலாம். இந்த காட்சிகளில் சில மிகவும் வேடிக்கையானவையாகவும், சில நிகழ்வுகள் மிகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும். சில நிகழ்வுகள் சோகத்தை கொடுப்பதாகவும் இருக்கும். அதே நேரத்தில், சில வீடியோக்கள் மக்களின் இதயங்களை வெல்லும் வகையில் இருக்கும். மனிதர்கள் முதல் விலங்குகள் வரையிலான பல வகை வீடியோக்கள் இதில் அடங்கும். 

மேலும் படிக்க | அட ஆட்டுமந்தை கூட்டங்களா? உங்களைப் பாத்து தான் மந்தத்தனத்தை கத்துக்கனும்! வீடியோ டிரெண்டிங்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News