ஹார்லி டேவிட்சனில் பால் டெலிவரி செய்யும் வைரல் 'அண்ணாமலை' - வீடியோ இதோ...!

Harley Davidson Viral Video : அண்ணாமலை பட ரஜினி போல் சைக்கிளில் வீடுகளுக்கு பால் டெலிவரி செய்வதை பார்த்திருப்பீர்கள். ஆனால், பல லட்ச ரூபாய் மதிப்பு வாய்ந்த பைக்கில் பால் போடுபவரை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இதோ பாருங்கள்...

Written by - Sudharsan G | Last Updated : Jan 7, 2023, 08:07 AM IST
  • இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டது.
  • பலரும் இதனை தங்களது பால்காரர்களுக்கு இதனை பார்வட் செய்து வருகின்றனர்.
  • பல மில்லியன் பார்வையாளர்களை இந்த வீடியோ தாண்டிவிட்டது.
ஹார்லி டேவிட்சனில் பால் டெலிவரி செய்யும் வைரல் 'அண்ணாமலை' - வீடியோ இதோ...! title=

உங்கள் வீட்டுக்கு வரும் பால்காரர்கள் பொதுவாக சைக்கிள், மொபட் பைக்குகள் ஆகியவையில்தான் பாலை ஊற்றிவிட்டு செல்வார்கள். மற்ற வியாபாரங்களை போல் அல்லாமல், இதில் பால் கேன்களை வைக்க நல்ல விஸ்தாராமான இருக்கை இருக்க வேண்டும். தனியான இருக்கை இல்லாவிட்டால், கயிறுகள் கொண்டு கேன்களை இருக்கமாக பைக்கில் கட்டிக்கொண்டு டெலிவரி செய்ய வேண்டிவரும். 

அதுமட்டுமின்றி, பாலை அளந்து ஊற்ற வைத்திருக்கும் அளவு பாத்திரங்களையும் எளிதாக எடுத்துவிட்டு, மீண்டும் வகையில் பைக்கில் இடம் கிடைக்க வேண்டும். சில்லறை வியாபாரம் என்றால் நிச்சயம் மைலேஜ் அதிகம் தரும் வண்டிகளை தான் பெற்றுக்கொள்வார்கள். ஓரளவிற்கு வேகமாக சென்றால் போதும் என்ற நிலையில், அனைத்து அளவிலான சந்துகளுக்குள்ளும் செல்லும் வகையிலான பைக்கையே அனைவரும் தேர்வு செய்வார்கள். 

'அண்ணாமலை' சைக்கிள்கள்

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பால் வியாபாரத்திற்கு என்று பெயர் பெற்ற ஒரு பைக் என்றால் அது பஜாஜ் M80 மொபட் பைக்தான். இடதுகை புறம் கியர் வைத்து இயக்கப்படும் இந்த வகை பைக்கைதான் தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த நிலை மாறிவிட்டது என்றே கூறலாம். ஆனால், அதற்கு முன்பெல்லாம் அண்ணாமலை பட ரஜினி பாணியில் சைக்கிளில்தான் பால்காரர்கள் பாலை டெலிவரி செய்து வந்தனர்.  

மேலும் படிக்க | Viral Video : தனது பைக்கில் ஏற மறுத்த ஏரியா பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர்

சைக்கிளில் டயனமோ, வித்தியாசமான ஒலி எழுப்பும் ஹாரன், ரேடியா பெட்டி மாட்டுவதற்கு ஒரு இடம், பின்புறம் கேனை கயிறால் கெட்டிவிட்டு, பக்கவாட்டில் தொங்கவிடப்பட்டிருக்கும் சாக்கிலோ, கூடையிலோ அளவு பாத்திரங்களை வைத்திருப்பது என சைக்கிளையும் கஸ்டமைஸ் செய்து வைத்திருந்தனர் நமது 'அண்ணாமலைகள்'. 

ஹார்லி டேவிட்சனில் பால் டெலிவரி?

ஆனால், இங்கு ஒருவர் பல  லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹார்லி டேவிட்சன் பைக்கை பால் வியாபாரத்திற்காக பயன்படுத்துவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், தினமும் வீட்டில் பால் பாக்கெட் வாங்காமால் பால்கார அண்ணனுக்காக காத்திருக்கும் அத்தனை பேரும் வாய் மேல் கைவைத்து அதன் வீடியோவை பார்த்து வருகின்றனர். அந்த வீடியோக்களை தங்கள் வீட்டில் பால் ஊற்றும் பால்காரரின் வாட்ஸ்அப் உள்பட அனைவருக்கும் அனுப்பி வருகின்றனர். 

இன்ஸ்டாகிராம் பயனரான அமித் பதானா கடந்த டிச. 18ஆம் தேதி பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக்கின் இருபுறமும் பால் ஏற்றிச் செல்லும் இரண்டு பெரிய உருளை வடிவில் இருக்கும் பால் கேன்களை  வைத்திருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், ஹார்லி டேவிட்சன் பைக்கில் ஒருவர் பால்கேன்களுடன் ஒரு வீட்டை விட்டு வெளியேறுவதை அந்த வீடியோவில் காணலாம். இதுதான் பலரையும் வியப்படைய செய்துள்ளது. வீடியோவில் இருப்பவர் யார், அவர் உண்மையிலேயே பால் வியாபாரம்தான் செய்கிறாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

யாரும் எதிர்பார்க்காத இந்த காணொளியை பார்த்து அனைவரும் வியப்படைந்துள்ளனர். இதனால் அந்த வீடியோவை வீயூஸ் தாறுமாறாக எகிறி வருகிறது. சமூக வலைத்தளங்களில், மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | திருமணத்தில் திடீரென அதை வெட்டிய மணமகள்... உறைந்துபோன உறவினர்கள் - வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News