Viral Video: இது குதிரையின் பியானோ கச்சேரி... கேட்டுத் தான் பாருங்களேன்

படைப்பாற்றல் என்பது மனிதனுக்கு மட்டும் சொந்தன்மானது அல்ல. விலங்குகள் கூட  படைப்பாற்றல் கொண்டது தான் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு உணர்த்துவோடு, உங்களுக்கு இந்த வீடியோ அளவற்ற மகிழ்ச்சியைத் தரும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 8, 2022, 09:01 PM IST
  • விலங்குகள் மற்றும் பறவைகள் கூட படைப்பாற்றல் கொண்டது தான்.
  • வேடிக்கையான விலங்கு அல்லது பறவை வீடியோக்கள் மன அழுத்தத்தை குறைக்கின்றன.
Viral Video: இது குதிரையின் பியானோ கச்சேரி... கேட்டுத் தான் பாருங்களேன் title=

இணைய உலகத்தில், தினமும் பல வகையான சுவாரஸ்யமான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. தினம் தினம், புதுமையான, வேடிக்கையான, அதிர்ச்சியான, திகிலான வீடியோக்கள் பலவற்றை சமூக ஊடகம் என்னும் களஞ்சியத்தில் காணலாம். சில சமயங்களில் இந்த வீடியோக்கள் நமத்து திகிலை கொடுப்பதாக் இருக்கும், சில சமயங்களில் அவை நம்மை வியப்பில் ஆழ்த்தும். சில வீட்யோக்கள் நம் கவலைகளை எல்லாம் மறந்து நம்மை சிரிக்க வைக்கும்.

இணைய உலகில் நம்பவே முடியாத அற்புதமான வீடியோக்கள் பலவற்றை காணலாம். ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கம் மட்டும் தான்  சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.  அந்த வகையில் தற்போது மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் குதிரை  வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.

விலங்குகளின் வேடிக்கையான வீடியோக்களைப் பார்ப்பது போன்ற மன அழுத்தத்தைத் தணிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை. அதனால்தான், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட மற்றும் விரும்பப்படும் வீடியோக்களாக இருக்கின்றன. இவை நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கின்றன.  மகிழ்ச்சியையும் நேர்மறை ஆற்றலையும் கொண்டு வருகின்றன.

படைப்பாற்றல் என்பது மனிதனுக்கு மட்டும் சொந்தன்மானது அல்ல. விலங்குகள் மற்றும் பறவைகள் கூட  படைப்பாற்றல் கொண்டது தான் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு உணர்த்தும். 

மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்

இந்த இசை மற்றும் ஆக்கப்பூர்வமானவை என்று சான்றுகள் மற்றும் ஆராய்ச்சி காட்டுகின்றன. அப்படி ஒரு குதிரையின் காணொளி உங்களை வியப்பில் ஆழ்த்தும். இந்த வீடியோவில், குதிரை ஒன்று பியானோ வாசிப்பதைக் காணலாம்.

குதிரை தனது மூக்கினால், பியானோவை இசைக்கும் இந்த 
வீடியோ  மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளது. எலெக்ட்ரானிக் கீபோர்டில் பியானோவை, வாய் மற்றும் மூக்கைப் பயன்படுத்தி வாசித்துள்ள இந்த குதிரை தனது அசாதாரண திறமையைக் வெளிப்படுத்தியுள்ளது. 

"அற்புதமான குதிரை" என்ற தலைப்புடன் Creature Nature  என்ற ட்விட்டர் கணக்கில் வீடியோ பகிரப்பட்டுள்ளது.

வீடியோவை இங்கே காணலாம்:

வேடிக்கையான விலங்கு அல்லது பறவை வீடியோக்கள் மன அழுத்தத்தை குறைத்து மக்களை அமைதிப்படுத்துகின்றன என்பது ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News