தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்படும் சில வீடியோக்கள் நமது மன அழுத்தத்தைக் குறைக்கவும், டென்ஷனை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. வேடிக்கையான விலங்குகளின் வீடியோக்களில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அந்த வகையில் யானை மிகவும் திறமையுடன் வேலியை குதிக்கும் வீடியோ இது.
யானைகள் நிலத்தில் வாழும் விலங்குகளில் உலகின் மிகப்பெரிய விலங்குகள். முழுமையாக வளர்ந்த யானை ஒரு நாளைக்கு 400 கிலோ வரை உணவையும் சராசரியாக 150 லிட்டர் தண்ணீரையும் உட்கொள்கிறது. ஆசிய யானைகள் ஆப்பிரிக்க யானைகளை விட அழகானவை. அவை சராசரியாக 20-21 அடி நீளமும், 6-12 அடி உயரமும், 5000 கிலோகிராம் வரை எடையும் கொண்டவை. யானைகள் மிகவும் புத்திசாலித்தனம் வாய்ந்தவை. தற்போது யானை வேலி தாண்டி குதிக்கும் வீடியோ வெளியாகி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் தூக்கமோ... குட்டியை எழுப்ப போராடும் தாய் யானை
வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:
ஹெரிடேஜ் அனிமல் டாஸ்க் ஃபோர்ஸின் ஃபேஸ்புக் கணக்கில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆசிய யானைகளால் எதையும் செய்ய முடியும் என்ற தலைப்பில் வீடியோ பகிரப்பட்டது. வீடியோவில், யானை தனது முன்னங் கால்களை முதலில் தூக்கி வேலிக்கு அப்பால் தனது முதல் இரண்டு அடிகளை வைக்கிறது. இந்த கால்களை பூமியில் பதித்த பிறகு, யானை எந்த சிரமமும் இல்லாமல் மீதமுள்ள இரண்டு கால்களையும் வேலிக்கு மேல் தூக்கி தாண்டுகிறது. இந்த வீடியோவை பலர் விரும்பி பார்த்து வருகின்றனர் மேலும் இந்த வீடியோவுக்கு பல கமெண்டுகள் பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்
மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ