நாயை பக்குவமாய் உறங்க வைக்கும் பூனை! மனதை ஆர்ப்பரிக்கும் வீடியோ

Cat and Dog Hug Video: ஒரு பூனை ஒன்று நாயை இதமாக தடவி கொடுத்து தூங்க வைக்கும் அற்புதமான காட்சி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jul 6, 2022, 04:14 PM IST
  • நாய்க்கு மசாஜ் செய்து விடும் பூனை.
  • சுகமாய் தூங்கும் நாய்.
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ.
நாயை பக்குவமாய் உறங்க வைக்கும் பூனை! மனதை ஆர்ப்பரிக்கும் வீடியோ title=

Cat and Dog Video: தனித்தனியாக நாய்கள் மற்றும் பூனைகளின் குறும்புத்தனத்தை ரசித்து வந்த வளர்ப்பு பிராணி பிரியர்களுக்கு தற்போது இவை இரண்டும் சேர்ந்து செய்யும் குறும்புகள் இணையத்தில் காண கிடைக்கின்றன.  பொதுவாகவே நாம் வளர்க்கும் செல்ல பிராணிகள் அறியாமல் செய்யும் சில விஷயங்கள் நம்மை கவர்ந்துவிடும், அதிலும் ஒரு விலங்கு மட்டுமல்லாது அதனுடன் கூடுதலாக சில விலங்குகளும் இணைந்து சில செயல்களை செய்து இன்னும் நமது இதயங்களை இதமாக்குகின்றன.  ஒரு பூனையாலும், நாயாலும் இவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுமா என்று நாம் வியக்கும் அளவிற்கு தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் பூனையும், நாயும் நடந்துகொள்கிறது.

மேலும் படிக்க | வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா ஆனா அதுக்குன்னு இப்படியா

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் லாஃப்ஸ் 4 ஆள் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.  தற்போது இணையத்தில் வைராகி வரும் அந்த வீடியோவில், சோபா மீது வெள்ளை நிற நாய் ஒன்று படுத்து இருப்பதையும், அதனருகில் கருஞ்சாம்பல் மற்றும் வெண்மை நிறம் கலந்த ஒரு பூனை ஒன்று இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது.  அந்த நாய் தலையணையின் மீது தலை வைத்து உறங்கிக்கொண்டு இருக்கிறது, அதற்கு சுகமான உறக்கத்தை கொடுக்கும் பொருட்டு அதன் அருகில் அமர்ந்திருக்கும் பூனை மசாஜ் செய்வது போல அதன் உடலில் தனது முன்னங்கால்களை வைத்து மெதுவாக அழுத்தி விடுகிறது, இடையில் அந்த நாய் எழுந்துவிட்டு மீண்டும் சுகமாக உறங்க தொடங்குகிறது. 

இதேபோன்று ஏற்கனவே ட்விட்டரில் பூனை ஒன்று நாய்க்கு தலையில் மசாஜ் செய்யும் வீடியோ வைரலாக நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி உள்ளது.  இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த அற்புதமான வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்திருப்பதோடு, இந்த வீடியோ இதுவரை ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.

மேலும் படிக்க | ரயில் நிலையத்தில் தெரு நாய்க்கு சோறூட்டிய பெண்ணின் வீடியோ வைரல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News