பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படயே நடுங்கும். அதிலும் ராஜ நாகம் என்பது மிகவும் ஆபத்தான, அதிக விஷம் கொண்ட பாம்பாக கருதப்படுகிறது.
இருப்பினும், சில மனிதர்கள் பாம்பை பிடிக்கும் பனியில் இருக்கார்கள் என்பதும் உண்மை தான். அதே போல் பாம்பைக் கட்டுப்படுத்தக்கூடிய பல விலங்குகள் உள்ளன. சில விலங்குகள் பாம்புகளை தங்களுக்கு இரையாக ஆக்குகின்றன. அதில் முக்கியமான ஒன்று கீரி. கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளதால், பாம்பு கொத்தினால், கீரியின் உடலில் காயங்கள் தான் ஏற்படுமே தவிர, அது சாகாது என்று கூறுவார்கள்.
இந்நிலையில் பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான ஆகோரமான தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் கீரிகளைப் போன்று தோற்றமளிக்கும் விலங்கு கூட்டமகா சேர்ந்து, நாகப்பாம்பை தாக்குவதைக் காணமுடிகிறது.
வைரலாகி வரும் இந்த வீடியோவில் கீரிகளை போன்ற பல விலங்குகள் பாலைவனத்தில் சுற்றித் திரிவதை காணலாம். அங்கே ஒரு ராஜ நாகப்பாம்பு ஒன்று தனது போக்கில் அமர்ந்திருக்கிறது. கீரி ஒன்றின் கண்களில் தனது பரம எதிரியான ராஜ நாகப்பாம்பு பட்டவுடன், அதனை தாக்க திட்டமிடத் தொடங்குகிறது. பாம்பும் அதனை பயங்கரமான முறையில் பழிவாங்குகிறது. சிறிது நேரம் கழித்து கீரிகளின் கூட்டம் அங்கே வந்து அனைத்து பக்கங்களிலிருந்தும் ராஜ நாகப்பாம்பை சுற்றி வளைக்கிறது. கீரிகள் எப்படி திட்டமிட்டு பாம்பை சுற்றி வளைத்தது என்பது வீடியோவை பார்த்தாலே புரியும்.
மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!!
வைரல் வீடியோவை இங்கே பாருங்கள்:
எல்லாப் பக்கங்களிலிருந்தும் கீரிகள் சூழ்ந்த பிறகும், பாம்பு பின் வாங்கும் மனநிலையில் இல்லை என்பதை இந்த வீடியோவில் மேலும் காணலாம். கடுமையாக பதிலடி கொடுக்க முயன்றது. இருப்பினும், இந்த வீடியோவின் முடிவில் என்ன நடந்தது என்று சொல்ல முடியவில்லை. பொதுவாக பாம்பு கீரி சண்டையில் பாம்பை கீரி கொன்றுவிடும். பாம்பு படம் எடுத்து கீரியை தாக்கி களைத்துப் போன பின், சோர்வாக உள்ள பாம்பின் தலையை கடித்து கீரி கொன்றுவிடும்.
அந்த வீடியோ நேஷனல் ஜியோகிராஃபிக் யுகே யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 96 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. வைரல் வீடியோவில் கீரியை போல தோற்றமளிக்கும் விலங்குகள் மீர்கட் என்று அழைக்கப்படுகின்றன, அவை ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. அவை சிறிய கீரி என்றும் அழைக்கப்படுகின்றன.
மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR