‘அவள் எனக்கே சொந்தம்’: திருமணத்தில் குட்டையை குழப்பிய மணமகளின் காதலன் ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மணப்பெண்ணின் முன்னாள் காதலன், தனது காதலி தனக்கு தான் சொந்தம் என நடுவில் புகுந்து குட்டையை குழப்பியதை காணலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 7, 2021, 12:20 PM IST
  • இணைய உலகம் மிகவும் வேடிக்கையானது.
  • இங்கு பல விதமான அரிய வீடியோக்களை நாம் தினமும் காணலாம்.
  • திடீரென்று யார் வந்தார் என்று மக்கள் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எல்லாம் அவசரமாக நடந்தது.
‘அவள் எனக்கே சொந்தம்’: திருமணத்தில்  குட்டையை குழப்பிய மணமகளின் காதலன் ..!!  title=

இணைய உலகம் மிகவும் வேடிக்கையானது. இங்கு பல விதமான அரிய  வீடியோக்களை நாம் தினமும் காணலாம். அந்த வீடியோக்களில் சில நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சமயம் அவை சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒரு சேர வழங்குகின்றன். சில வீடியோக்கள் நம்மை சோகத்தில் ஆழ்த்துகின்றன.

அந்த வகையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் (Viral Video), திருமணம் ஒன்றில் மணப்பெண்ணின் முன்னாள் காதலன், தனது காதலி தனக்கு தான் சொந்தம் என நடுவில் புகுந்து குட்டையை குழப்பியதை காணலாம்.

 இந்த வீடியோ உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு திருமண விழா. அங்கு மணமகன் மற்றும் மணமகளின் திருமணத்தில் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. அந்த நேரத்தில் அதிரடியாக நுழைந்த ஒருவர், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார். இந்த காட்சியை பார்த்த மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்தார். அருகில் இருந்தவர்களும் செய்வதறியாது திகைத்தனர். 

ALSO READ | மாலையை தூக்கி எறிந்த மணமகள், திகைத்து நின்ற மணமகன்: அங்க ஒரு ட்விஸ்ட்!!

திடீரென்று யார் வந்தார் என்று மக்கள் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எல்லாம் அவசரமாக நடந்தது. அந்த நபர் தனது முகத்தை துணியினால் மறைத்து மேடைக்கு வந்து மணப்பெண்ணை இழுத்து பிடித்து வலுக்கட்டாயமாக அவரது நெற்றியில் குங்குமத்தை பூசினார். வட இந்திய திருமணங்களில், நெற்றியில் குங்குமம் இடுவது, தாலி கட்டுவதை போன்ற மிக முக்கிய சடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கியதை காணொளியில் காணலாம்.  பின்னர் இந்த வழக்கு கோரக்பூரின் ஹர்பூர் புத்தத் காவல் நிலையப் பகுதியில் பதிவானது. திருமணத்தின் போது, ​​மணமக்கள் மேடையில் மாலை மாற்றிக் கொள்ள செய்ய தயாராக இருந்தபோது.  ஏற்பட்ட இந்த  சம்பவத்தை அடுத்து, உடனடியாக மணக்கள் தரப்பு போலீசில் புகார் அளித்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை புரிந்து கொண்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

ஹர்பூர் புதாத் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் இந்த பெண்ணை காதலித்துள்ளான். ஆனால், அவன் வெளியூர் சென்றிருந்த நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதையறிந்த காதலன் கிராமத்திற்கு திரும்பி வந்து திருமணத்தின் போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளான்.

ALSO READ | ஆச்சர்ய தகவல்! குதிகால் உயர செருப்புகள் ஆண்களுக்காகத் தான் வடிவமைக்கப்பட்டது..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Telegram Link: https://t.me/ZeeNewsTamil

Trending News