பாம்புக்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த நபர்..! சினம் கொண்டு சீறிய நாகம்..! வைரல் வீடியோ..

ஒரு நாகப்பாம்பிற்கு வாயோடு வாய் வைத்து ஒருவர் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 16, 2023, 11:37 AM IST
  • பாம்புகளை வைத்து வித்தை காட்டி சிலர் வைரலாவதுண்டு.
  • ஒரு நபர் பாம்புக்கு லிப் கிஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.
  • இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாம்புக்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த நபர்..! சினம் கொண்டு சீறிய நாகம்..! வைரல் வீடியோ.. title=

இணையதளத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக பலர் பல விதமான காரியங்களை ட்ரெண்டாகி வருகின்றனர். வைரலாக வேண்டும் என்று அவர்கள் செய்யும் சில விஷயங்கள் சமயங்களில் அவர்களின் உயிரையே பறித்து விடுகிறது. சில வீடியோக்கள் நம்மை இரவில் தூங்க விடாமல் செய்யும் அளவிற்கு மயிர்கூச்சரிய வைக்கும் பயத்தை கிளப்புகிறது. அப்படி நம்மை பதைபதைக்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பாம்பின் மீது பயம் இல்லாதோர்..

“பாம்பை கண்டால் படையும் நடுங்கும்” என்று ஒரு பழ மொழி உள்ளது. எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் பாம்பை பார்த்தால் கொஞ்சம் வெளவெளத்துதான் போவான் என்பதுதான் இதற்கு அர்த்தம். கூட்டமாக எத்தனை பேர் வந்தாலும் அவர்களை ஓட ஓட விரட்டுவதற்கு பாம்புகளுக்கு திறன் உள்ளது. பாம்பை கண்டால் பலர் அஞ்சி நடுங்கும் ஈதே உலகில்தான் பலர் பாம்பை வைத்து வித்தை காட்டி பிழைப்பு நடத்துகின்றனர். இன்னும் சிலருக்கு, பாம்பு மிகப்பிடித்த பிராணியாகவும் உள்ளது. ஆனால், லிப் கிஸ் கொடுக்கும் அளவிற்கு யாருக்காவது பாம்பை பிடிக்குமா..? அப்படி ஒரு நபர் பாம்பிற்கு முத்தம் கொடுக்க போய் முகத்தை புண் ஆக்கிக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | குட்டி நாகத்தை ‘லபக்’கென விழுங்கிய ராஜ நாகம்..! வைரலாகும் ‘திக் திக்’ வீடியோ..!

பாம்பிற்கு லிப் கிஸ்..!

இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பாம்பிற்கு ஒரு இளைஞர் வாயுடன் வாய் வைத்து முத்தம் கொடுக்கிறார். ஆனால், அந்த பாம்பிற்கு கொஞ்சமும் இது பிடிக்கவில்லை என்பது ஆரம்பத்திலேயே தெரிகிறது. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த பாம்பு, பின்பு அவரது முகத்தை கடிக்கிறது. 

இளைஞரின் முகத்தை பதம் பார்த்தவுடன் அந்த பாம்பு அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறது. பாம்பின் இந்த அதிரடி தாக்குதலால் கொஞ்சம் தடுமாறிய அந்த இளைஞர் உடனட்யாக சுதாரித்துக்கொண்டு வலைந்து நெளிந்து தப்பிக்க முயலும் அந்த பாம்பின் வாலை பிடிக்கிறார். அதன் பிறகு தன் முகத்தில் பாம்பு கடித்த இடத்தை தொட்டு பார்த்து வழியும் ரத்ததை துடைக்கிறார். 

நெட்டிசன்களின் ரியாக்‌ஷன்:

என்னதான் ஒரு சில வீடியோக்கள் பார்ப்பதற்கே ரத்தத்தை உறைய வைப்பது போன்ற பயத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சிலர் அதை அமர்ந்து பார்ப்பதுண்டு. அப்படி, மேற்கூறிய வைரல் வீடியோவையும் சிலர் பார்த்துள்ளனர். அதில், ஒருவர், “அந்த நபர் இன்னும் உயிருடன்தான் இருக்கிறாரா..? இதை செய்ய அவருக்கு எப்படி தோன்றியது..? அந்த பாம்பு அவரை கடித்ததில் தவறே இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு நெட்டிசன், “இதுதான் இருப்பதிலேயே பயங்கரமான லிப் டு லிப் கிஸ்..” என்று காமெடியாக கமெண்ட் செய்துள்ளார். இன்னொரு நபர், “இதனால்தான் பெண்கள் ஆண்களை விட அதிக நாட்கள் உயிர் வாழ்கின்றனர்..” என்று கமெண்ட் செய்துள்ளார். 

பாம்பு கடித்தால் என்ன ஆகும்..?

ஆசியாவின் தெற்கு பகுதியில் அதிகமாக காணப்படும் ஊர்வன வகைகளுள் ஒன்று பாம்புகள். ஒரு சாதாரண பாம்பின் நீள 5.85 மீட்டர் வரை இருக்குமாம். பாம்பின் நஞ்சு மிகவும் சக்தி வாய்ந்தது. இதில் நியூரோடாக்சிக் என்ற வகை நஞ்சு உள்ளது. இது, உடனடியாக நரம்பு மண்டலத்தை தாக்கி உடல் மூளையை நேரடியாக தாக்கும். பின்னர், உடலின் ஒவ்வொரு பாகங்களும் உடனடியாக செயலிழக்க ஆரம்பித்து விடும். ஒரு சில பாம்புகள் பல முறை கடித்தால்தான் நஞ்சு வேகமாக பரவும். ஆனால், ராஜ நாகம் அல்லது கருநாகம் வகை பாம்புகள் கடித்தால் உடனடியாக அதன் நஞ்சுகள் கடிப்பட்டவரின் உடலில் வேலையை காண்பிக்க ஆரம்பித்து விடும்.

மேலும் படிக்க | ஓவரா சீன் போட்டா இப்படித்தான் ஆகும்... முதலை மீது சவாரி போக நினைத்தவருக்கு நேர்ந்த கதி...!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News