களவாணி பட பாணியில் லாரியில் இருந்து பொருட்களை திருடும் கும்பல்! வைரல் வீடியோ!

Viral Video: விமல் நடித்த களவாணி பட பாணியில் பைக்கில் வந்த திருடர்கள் மும்பை நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருக்கும் லாரியில் இருந்து பொருட்களை திருடி உள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : May 27, 2024, 11:34 AM IST
  • லாரியில் இருந்து பொருட்கள் திருட்டு.
  • மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் நடந்த சம்பளம்.
  • மூன்று திருடர்கள் பொருட்களை திருடி செல்கின்றனர்.
களவாணி பட பாணியில் லாரியில் இருந்து பொருட்களை திருடும் கும்பல்! வைரல் வீடியோ! title=

இன்றைய உலகில் பலவித திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் முறையில் சரி, வீட்டை உடைத்து கொள்ளை அடிப்பதிலும் புதிய புதிய பாணியை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் மூன்று பேர் கொண்ட கும்பர் நடுரோட்டில் திருட்டில் ஈடுபட்ட சம்பளம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூர் மாவட்டத்தில் ஆக்ரா-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதுவும் பட்டப்பகலில் இப்படி ஒரு திருட்டு நடந்துள்ளது காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நெடுஞ்சாலையில் ஓடும் லாரியை ஒருவர் பைக்கியில் பின்தொடர, இருவர் லாரியின் மீது ஏறி பொருட்களை திருடுகின்றனர். 

மேலும் படிக்க | Viral Video: சும்மா இருக்கும் குரங்கை சீண்டிய பாம்பு... பாடம் கற்பித்த குரங்கு..!!

லாரியில் இருந்து ஒரு பெரிய பார்சலை எடுத்து ரோட்டில் தூக்கி வீசுகின்றனர். பின்னர் அவர்களை பாலோ செய்து வந்த பைக்கில் 2 பேரும் ஏறி எஸ்கேப் ஆகின்றனர். லாரியில் இருந்து எடுக்கப்பட்ட பார்சலை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு மறந்துவிடுகின்றனர். இவற்றை எல்லாம் அந்த லாரியின் ஓட்டுநர் கவனிக்கவில்லை. வண்டியில் இருந்து பார்சல் எடுக்கப்பட்டது தெரியாமல் அவர் சென்று கொண்டு உள்ளார். இந்த முழு காட்சிகளையும் பின்னால் வந்த ஒரு வாகன ஒட்டி படம்பிடித்துள்ளார். காரில் இருந்த படியே இந்த திருட்டு சம்பவத்தை படம்பிடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். ஒரு பயனர், "டிரக் டிரைவர் திருடர்களின் சூழ்ச்சியை உடைக்க பிரேக் போட்டிருக்கலாம்"  என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், “அடுத்த நாள் சிட்டி சென்டர் அருகே: ‘பையா, இவை ஆப்பிள் ஹெட்ஃபோன்கள். 90% தள்ளுபடியில் வேண்டுமா?’’ என்று நக்கலாக பதிவிட்டுள்ளார். மேலும் சிலர் இந்த திருட்டில் லாரி ஓட்டுநருக்கும் இந்த திருட்டில் தொடர்பு இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார். 

மேலும், இந்தியாவில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது ஒன்று புதிது இல்லை. கடந்த மே 2023ல், வைரலான மற்றொரு வீடியோவில் மகாராஷ்டிராவில் சாலையில் சென்று கொண்டு இருந்த டிரக்கின் மீது ஒருவர் ஆடுகளைத் திருடுவதை நாம் பார்த்து இருந்தோம். வண்டியில் இருந்த ஆடுகளை ஒவ்வொன்றாக எடுத்து சாலையில் வீசினார். இதுவும் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த நபரால் பதிவு செய்யப்பட்டது. லாரியில் நடந்த திருட்டு சம்பவத்தை போலவே விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்திலும் ஒரு காட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஓய்வு பெற்ற இந்திய ராணுவ நாய்க்கு கிடைத்த ராஜமரியாதை... பாராட்டும் நெட்டிசன்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News