Viral News: சர்வர் சுந்தரமாக மாறிய ‘குரங்கு’... ஊதியமாக கிடைக்கும் வாழைப்பழம்!

ஜப்பானில் உள்ள ஒரு உணவகத்தில் குரங்குகள் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறுகின்றன. இந்த குரங்குகளுக்கு உணவக உரிமையாளர்கள் வாழைப்பழத்தை சம்பளமாக கொடுக்கின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 2, 2023, 05:20 PM IST
  • குரங்குகளைப் பார்க்க வெகு தொலைவில் இருந்து வரும் மக்கள்.
  • டோக்கியோவில் அமைந்துள்ள கயாபுகியா உணவகம்.
  • உணவக உரிமையாளர்கள் வாழைப்பழத்தை சம்பளமாக கொடுக்கின்றனர்.
Viral News: சர்வர் சுந்தரமாக மாறிய ‘குரங்கு’... ஊதியமாக கிடைக்கும் வாழைப்பழம்! title=

ஜப்பானில் உள்ள ஒரு உணவகத்தில் குரங்குகள் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறுகின்றன. இந்த குரங்குகளுக்கு உணவக உரிமையாளர்கள் வாழைப்பழத்தை சம்பளம் கொடுக்கின்றனர்.

கடின உழைப்பாளியான குரங்குகள்

ஜப்பான் மக்கள் கடினமான உழைப்பாளிகளைக் கொண்ட நாடு என்று அறியப்படுகிறது. ஆனால் அங்குள்ள மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் மிகவும் கடினமாக உழைக்கின்றன.  உணவகங்களில் வெயிட்டர்களாக வேலை செய்யும் இந்த கடின உழைப்பாளியாக கலக்கும் குரங்குகளைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். அதற்கு ஈடாக அவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது.

குரங்குகளைப் பார்க்க வெகு தொலைவில் இருந்து வரும் மக்கள்

ஜப்பானின் கயாபுகியா உணவகம் மிகவும் பிரபலமானது. இந்த உணவகம் வித்தியாசமான உணவகங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. இங்கு இரண்டு குரங்குகளுக்கு சர்வர் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த குரங்குகள் உணவகத்தில் சர்வர் பணியாளர்களாக வேலை செய்கின்றன. இந்த குரங்குகளை காண வெகு தொலைவில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். இவர்கள் பரிமாறும் உணவை உண்ணவே பலர் வருவார்கள் என்றே சொல்ல வேண்டும்.

மேலும் படிக்க | யாரோட ஆட்டம் சூப்பரா இருக்கு... பார்த்து சொல்லுங்க மக்களே! யானையின் க்யூட் வீடியோ!

டோக்கியோவில் அமைந்துள்ள கயாபுகியா உணவகம்

ஜப்பானின் டோக்கியோவில் அமைந்துள்ள கயாபுகியா உணவகத்தின் உரிமையாளர் குரங்குகள் எவ்வளவு புத்திசாலி என்பதை நிரூபித்துள்ளார். ஜப்பானில், விலங்குகளை வேலை செய்ய வைப்பவர்கள் அல்லது துன்புறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கான சட்ட விதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திடம் அனுமதி பெற்ற உரிமையாளர்

இதுபோன்ற சூழ்நிலையில், உணவக உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று, தங்கள் இடத்தில் குரங்குகளை வேலைக்கு அமர்த்துகின்றனர். இதிலும் சில விதிகள் உள்ளன. குரங்குகளை வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வைக்க முடியும்.

விருந்தினரை வரவேற்கும் குரங்குகள் 

இங்கு வரும் விருந்தினரை இரண்டு குரங்குகள் வரவேற்பதுதான் இந்த உணவகத்தின் சிறப்பு. குரங்குகள்தான் விருந்தினர்களுக்கு மெனு கார்டுகளைக் கொண்டுவந்து அவர்களிடமிருந்தும் ஆர்டர்களைப் பெறுகின்றன. உணவு பரிமாறும் பணியையும் குரங்குகள் செய்கின்றன. இந்த உணவகத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த குரங்குகளும் அலுவலக ஊழியர்களைப் போலவே சீருடை அணிந்துகொள்கின்றன. இந்த வேலையைச் செய்வதற்கு, அவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது. குரங்குகளுக்கு அவை மிகவும் விரும்பும் வாழைப்பழம் சம்பளமாக வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | Video: மெட்ரோ ரயில் கதவில் மாட்டிய ஆடை... பிளாட்பார்மில் இழுத்து செல்லப்பட்ட பெண்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News