வினோத வழக்கு! குரங்கின் மீது போட்ட FIR எங்கே; வனத்துறையினரின் நிபந்தனை!

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் குந்தித் பகுதியில் அடிக்கடி குரங்குகளால் தொந்தரவு ஏற்படுகிறது. அப்பகுதியில், மக்களை குரங்கு கடித்த சம்பவம் குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 8, 2022, 01:56 PM IST
  • குரங்கு குதித்து சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தார்
  • உறவினர்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவல நிலை
  • இந்த பகுதியில் அடிக்கடி குரங்குகளால் தொந்தரவு ஏற்படுகிறது.
வினோத வழக்கு! குரங்கின் மீது போட்ட FIR எங்கே; வனத்துறையினரின் நிபந்தனை! title=

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் குந்தித் பகுதியில் அடிக்கடி குரங்குகளால் தொந்தரவு ஏற்படுகிறது. அப்பகுதியில், மக்களை குரங்கு கடித்த சம்பவம் குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். இதை அடுத்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கி வருகிறார்கள். 

இந்நிலையில், இந்த மாதம் பிப்ரவரி 4 அன்று, ஜம்தாராவில் உள்ள குந்திட்டின் பாக்தேஹரி கிராமத்தில் குரங்கு ஒன்று குதித்ததால் சுவர் இடிந்து விழுந்தது. 35 வயதான கவிதா மண்டல் என்ற பெண் அதன் இடிபாடுகளுக்குள் புதைந்து இறந்தார். குரங்கு குதித்ததால் சுவர் இடிந்து விழுந்த நிலையில், உறவினர்கள் வனத்துறையிடம் இழப்பீடு கோரினர். 

வனத்துறையினர், இழப்பீடு வேண்டும் என்றால், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் FIR நகலை காட்டுமாறு கூறினர். குரங்கிற்கு (Monkey) எதிராக முதல் தகவல் பதிவு செய்ய அவர்கள் காவல் துறையை அடைந்தபோது, ​​அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் சம்பவத்தின் சாட்சிகளையும் அழைத்து வரச் சொல்லியுள்ளார்கள். இதனால், தாக்கிய குரங்கை எங்கே தேடுவது என நொந்து போயுள்ளனர் அந்த குடும்பத்தினர்.

ALSO READ | Viral Video: ‘சிங்கத்தை சீண்டினால் என்ன ஆகும்’; சிங்கம் பாடம் புகட்டும் வைரல் வீடியோ!

இதுமட்டுமின்றி, சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உடனே வரமால், வனத்துறை அதிகாரிகள் மூன்று நாட்களுக்கு பிறகு அங்கு வந்து பார்த்தனர். அதற்குள் பெண்ணின் இறுதி சடங்குகள் நடந்து முடிந்து விட்டதால், பிரேத பரிசோதனை கூட செய்ய முடியவில்லை.

வனத்துறையினர் மூன்று நாட்களுக்கு பிறகு வந்த நிலையில், இறந்த பெண்ணின் உறவினர்கள் இழப்பீடு கேட்டபோது, ​​வனத்துறையினர் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் FIR நகலை காட்டுமாறு கூறினர். 

பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு வனத்துறையினர் இதையெல்லாம் கேட்டால் என்ன செய்வது என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். வனத்துறை குழுவினர் சம்பவம் நடந்த நாளுக்கு வந்திருந்தால், இதுபோன்ற பிரச்னை வந்திருக்காது.

குடும்ப உறுப்பினர்கள், எப்படி FIR பதிவு செய்ய முடியும், குரங்கை தேடிக் கொண்டா போக முடியும் என வேதனையில் நொந்து போயுள்ளனர். இந்த விவகாரத்தில் மிகவும் மனமுடைந்த பெண்ணின் கணவர் ஆஷிஷ் மண்டல், மனைவியை இழந்து வாடுவதோடு, இழப்பீடும் கிடைக்காத நிலையில் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

இதுமட்டுமின்றி குரங்கு எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது, சம்பவத்தின் போது இருந்தவர்கள் யார், யார் பார்த்தார்கள் போன்ற கேள்விகளை காவல் துறையினரும் வனத்துறையினரும் முன் வைத்துள்ளனர் . 

இந்த இறந்த பெண்ணின் உறவினர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிலையில், குரங்கின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தராமல், அங்கும் இங்கும் அலைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என நோந்து போயுள்ளனர். சம்பவத்தின் போது இருந்த குரங்கை எங்கிருந்து கண்டுபிடித்து கொண்டு வருவது என வேதனைபடுகின்றனர் இறந்த பெண்ணின் குடும்பத்தினர்.

ALSO READ | Spider Bite: சிறிய சிலந்தி தானே என எண்ண வேண்டாம்; ஒரு பெண்மணியின் பகீர் அனுபவம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News