Work From Home பரிதாபங்கள்; கணவர் ஆபீஸ் வர அனுமதியுங்கள் என கெஞ்சும் மனைவி..!!

வொர்க் ப்ரம் ஹோம் பரிதாபத்தை விளக்கும் தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் ட்விட்டர் பதிவு மிகவும் வைரலாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 10, 2021, 04:37 PM IST
Work From Home பரிதாபங்கள்; கணவர் ஆபீஸ் வர அனுமதியுங்கள் என கெஞ்சும் மனைவி..!! title=

புதுடெல்லி: கொரோனா நாம் வேலை செய்யும் முறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துவிட்டது. இது சில வரமாக அமைந்தாலும், சிலருக்கு அது சாபமாகி விட்ட பரிதாபங்களும் உண்டு. ஆம்.. இதனால், மிக மோசமகா பாதிக்கப்பட்ட ஒரு பரிதாப பெண்மணி தனது கணவரை அலுவலகத்திற்கு வர அனுமதிக்க வேண்டும் என அவரது பாஸிடம் கெஞ்சி கேட்கும் பதிவு மிகவும் வரைலாகி வருகிறது.  

RPG குழுமத்தின் தற்போதைய தலைவரான ஹர்ஷ் வர்தன் கோயங்கா இது குறித்து செய்த ட்விட்டர் பதிவு மிகவும் வைரலாகியுள்ளது. அவர் தனது பதிவில், தனது கணவர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், வேலை செய்யும் போது முழு கோவிட் நெறிமுறைகளை பராமரிபார் என தான் உறுதி அளிப்பதகாவும்  கூறும் ஒரு மனைவியில் புலம்பலை பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த பெண் தனது கணவனின் இடைவிடாத நச்சரிப்பால் மிகவும் பாதிக்கபட்டுள்ளதகாவும், அடிக்கடி காபி வேண்டும் ஸ்நாக்ஸ் வேண்டும் என நச்சரிப்பதாகவும் புலம்பியுள்ளார்.அதோடு, அவர் அங்கே இங்கே என பொருட்களை வைத்த இடத்தில் வைக்கமால், வீட்டை நாசமாக்குவதாகவும், தன்னால் வீட்டை சுத்தமாக பராமரிக்க முடியவில்லை எனவும் புலம்பியுள்ளார். 

ALSO READ | Viral News: தென் கொரொயாவில் தீயணப்பு படையின் கவுரவ தூதராக நியமிக்கப்பட்ட ’நாய்’..!!

அது மட்டுமல்லாமல், அந்த பெண்மணி ஏற்கனவே, எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது குழந்தையாக இருக்கும் கணவரை பார்த்துக் கொள்வது பெரும் சுமையாக இருக்கிறது என புலம்பியுள்ளார். மேலும், ஆன் லைன் கால் சமயத்தில் கணவர் தூங்கி விடுகிறார் எனவும் புகார் அளித்துள்ளார்.

வொர்க் ப்ரம் ஹோம் பரிதாபத்தை விளக்கும் தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் ட்விட்டர் பதிவு மிகவும் வைரலாகியுள்ளது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் ட்விட்டர் பதிவை 5,300 க்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். மேலும் 480 க்கும் மேற்பட்டவர்கள் ரீட்வீட் செய்துள்ளனர்.

ALSO READ | Wine: ‘மது’ பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News