Video: நிச்சைய மோதிரத்தை மறைத்து வைத்தாரா பிரியங்கா சோப்ரா!

டெல்லி விமான நிலைம் வந்தடைந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தமது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி மறைத்து வைத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 7, 2018, 02:05 PM IST
Video: நிச்சைய மோதிரத்தை மறைத்து வைத்தாரா பிரியங்கா சோப்ரா! title=

டெல்லி விமான நிலைம் வந்தடைந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தமது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி மறைத்து வைத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனசும் காதலித்து வருவதாக நெடுநாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில், இவர்கள் இருவருக்கு லண்டனில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், தான் ஒப்ந்தமாகியுள்ள திரைப்பட படபிடிப்பு நிமித்தமாக லண்டன் சென்றிருந்த பிரியங்கா லண்டனிலிருந்து டெல்லி திரும்பினார். 

அப்போது விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்கு முன் அவர் தன் கைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி, பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்தார். இந்த மோதிரம் அவரது நிச்சயதார்த்த மோதிரமாக இருக்கலாம் என தெரிகிறது. 

இதன் காரணமாக பிரியங்கா சோப்ரா, தமது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி மறைத்து வைத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Trending News