Cameraman என்னும் புதிய அவதாரம் எடுக்கும் Rohit Sharma!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மணீஷ் பாண்டேவை பல்வேறு கோணங்களில் ரோஹித் ஷர்மா படமெடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2018, 10:15 AM IST
Cameraman என்னும் புதிய அவதாரம் எடுக்கும் Rohit Sharma! title=

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மணீஷ் பாண்டேவை பல்வேறு கோணங்களில் ரோஹித் ஷர்மா படமெடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, நான்கு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக பிரிஸ்மேன் நகரில் நடைப்பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது, இந்நிலையில் இன்று மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டி20-க்கு இந்திய அணி தயாராகி வருகிறது.

இப்படியான நிலையில் இந்தியாவின் ஹிட் மேன் என அழைக்கப்படும் ரோஹித் ஷர்மா கேமரா மேனாக மாறிய காட்சியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. 

இந்த வீடியோவில் விளம்பரம் ஒன்றுக்காக சக வீரர் மனீஷ் பாண்டேவுக்கு போட்டோ ஷூட் நடந்துள்ளது. அங்கு வந்த, ரோஹித் ஷர்மா, மொபைலில் மனீஷ் பாண்டேவை பல விதமாக வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நடைப்பெறும் இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா தோற்கும் பட்சத்தில் டி20 தொடரை இழக்கும், இதன் காரணமாக வெற்றியை நோக்கி இந்தியா போராடும் என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News