கார் கதவுகளை கடித்து இழுத்து உடைக்கும் நாய்களின் வீடியோ

வீட்டில் நிறுத்தியிருக்கும் காரின் முன்பக்கத்தை இரண்டு நாய்கள் சேர்ந்து கடித்து உடைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 23, 2022, 09:28 PM IST
  • வைரலாகும் நாய்களின் சேட்டை வீடியோ
  • கார் சின்னாபின்னமாக்குகின்றன
  • 2 நாய்கள் சேர்ந்து செய்யும் அடாவடி
கார் கதவுகளை கடித்து இழுத்து உடைக்கும் நாய்களின் வீடியோ title=

வீட்டு விலங்கான நாய் மிகவும் பாசமானது, ஆபத்தில் உதவுவது என அதனைப் பற்றி நல்ல விஷயங்களையே நிறைய கேள்விப்பட்டிருப்போம். அது உண்மையுடம் கூட. வீட்டில் செல்லமாக வளர்க்கும் நாய், கொடுக்கும் ஆறுதல், அன்பு அளவில்லாதது. சோகமாக நீங்கள் வீட்டுக்கு வரும்போது, அது செய்யும் சின்ன சின்ன சேட்டை உங்களை மகிழ்வித்துவிடும். ஆனால், அதே நாய்க்குட்டிகளிடம் செல்ல சேட்டைகளும் இருக்கும். அதாவது அவற்றின் மறுப்பக்கம் ஜீரணிக்க கடினமாக இருந்தாலும், செய்யும் சேட்டைகள் கோபத்தை ஏற்படுத்திவிடும்.

மேலும் படிக்க | பொம்மையை எடுக்க படாதபாடு படும் நாய்க்குட்டி - வைரல் வீடியோ

வீட்டில் இருக்கும் துணிகளை கடித்து கிழிப்பது, செருப்பை எடுத்துச் சென்றுவிடுவது அல்லது கடித்துக் குதறிவிடுவது என அவற்றின் சேட்டையை, அந்த நேரத்தில் நம்மால் ஜீரணித்துக் கொள்ளவே முடியாது. சில வீடுகளில் தலையணையைக் கூட வெளியே எடுத்துச் சென்று கடித்துக் குதறி விளையாடும் நாய்கள் இருக்கின்றன. ஆனால் இப்போது வீடியோவில் வைரலாகியிருக்கும் நாய்கள் இவற்றையெல்லாம் விஞ்சிவிட்டன.

காரின் முன்பக்கத்தையே கடித்து குதறிவிடுகின்றன. ஆம், கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் உண்மை. வீட்டின் வெளிப்புறத்தில் காஸ்டிலியான கார் ஒன்று நிறுத்தப்பட்டிருக்கிறது. அதன் அருகே விளையாடும் இரண்டு நாய்கள், காரின் முன்பக்கத்தை கடித்து இழுக்கின்றன. மிகவும் இறுக்கமாக இருந்தாலும், விடாப்பிடியாக கடித்து, இழுத்து அதில் வெற்றியும் பெற்றுவிடுகின்றன. முன்பகத்தை சின்னாபின்னமாக்கி, காரின் அழகையே கெடுத்துவிடுகின்றன. இந்தவீடியோ டிவிட்டரில் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கானோரால் ரசிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் குடிமகனின் வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News