சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27 ஆம் தேதி வரை மொத்தம் 41 மண்டல பூஜை நடைபெறும். இதனையொட்டி சிறுவழி, பெருவழி என அனைத்து பாதைகள் வழியாகவும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். பக்தர்கள் வருகையையொட்டி தேவசம்போர்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருக்கும் பக்தர்கள், சபரிமலை செல்லும்போது, அவ்வழியே இருக்கும் வாவர் மசூதிக்கும் சென்று வழிபாடு நடத்துகின்றனர். பாரம்பரியமான இந்த மசூதிக்கு இந்த ஆண்டும் வழக்கத்தைவிட அதிகமாக பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். அங்கும் பக்தர்களின் வருகைக்காக அனைத்து ஏற்பாடுகளையும் மசூதி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். பெண்கள் வருவதற்கும் தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | வாவ்..இந்த கலர் ல கூட பாம்பு இருக்கா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ
இந்நிலையில், வாவர் மசூதியில் பக்தர்கள் குழுவாக பாட்டுப்பாடி வழிபடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் இணையவாசிகள், மத ஒற்றுமைக்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு என பெருமிதம் தெரிவித்துவருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில், டிசம்பர் 26 ஆம் தேதி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும், 27 ஆம் தேதி மண்டல அபிஷேகமும் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கோயில் நடை சாத்தப்படும்.
#கார்த்திகை #சபரிமலை pic.twitter.com/n6GkMZZVoa
— (@iam_nithankrish) November 18, 2022
பின்னர், மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். கொரோனா அச்சம் நீங்கிஇருப்பதால் ஐயப்பன் கோயிலில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. எருமேலி, நிலக்கல், பம்பா, சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | சீண்டிய நபரின் கைகளை பதம் பார்த்த பாம்பு: பதற வைக்கும் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ