நீலகிரி மாவட்டம், கூடலூர் முதுமலை வன பகுதியானது 325 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்தப் பகுதியில் சில வாரங்களாக மழை பெய்து வந்ததால், காடுகள் அனைத்தும் பச்சை பசேலென காணப்படுகிறது. புற்களும் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காட்டு யானை உள்ளிட்ட விலங்குகள் அப்பகுதியில் உணவுக்காக முகாமிட்டுள்ளன. கூட்டமாக சுற்றித்திரியும் காட்டு யானைகள், இலை, கொடி தலைகளை தேடித் தேடி உண்ணுகின்றன.
மேலும் படிக்க | ஆற்று நீரில் சிக்கிய நாயை மீட்ட இளைஞர்...வைரல் வீடியோ!
வனவிலங்குகள் வருகையையொட்டி, அங்கு சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் வாகனங்கள் மூலம் அழைத்துச் சென்று காண்பித்து வருகின்றனர். வழக்கமாக இது நடைபெறக்கூடிய ஒன்று என்றாலும், இந்த முறை வனத்துறை வாகனத்தை யானை ஒன்று துரத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று யானைகள் இருக்கும் பகுதிக்கு வனத்துறையினர் சென்றுள்ளனர். அப்போது யானைகள் கூட்டமாக இருப்பதை பார்த்து அவர்கள் வியப்படைந்தனர்.
பின்னர் அந்த வழியே செல்ல முற்பட்டபோது பெரிய தந்தத்துடன் இருந்த காட்டு யானை திடீரென வனத்துறை வாகனத்தை தாக்க முற்பட்டது. இது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுதாரித்துக்கொண்ட வனத்துறை உடனடியாக வாகனத்தை ரிவர்ஸ் எடுத்து வந்து பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர். சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்த இந்த வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. திரில்லான அனுபவமாக இருந்ததாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | இறந்த குட்டியின் உடலை சுமந்து செல்லும் தாய் யானை; கண்ணீரை வரவழைக்கும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR