மூச்சுவிடும் பூமி... இணையத்தில் வைரலாகும் அதிசய வீடியோ: மிஸ் பண்ணாம பாருங்க

Viral Video of Earth Breathing: பூமியும் மூச்சுவிடும்!! ஆம் அதற்கு சான்றாக ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 6, 2024, 12:42 PM IST
  • பூமி மூச்சு விடுமா?
  • நம்மை போல் சுவாசிக்குமா?
  • சுவாசிக்கும் என்கிறது இந்த அதிசய வீடியோ.
மூச்சுவிடும் பூமி... இணையத்தில் வைரலாகும் அதிசய வீடியோ: மிஸ் பண்ணாம பாருங்க title=

Viral Video of Earth Breathing: சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படும் வீடியோக்கள் நம் சிந்தனைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைகின்றன. சில வீடியோக்கள் பல நாட்களுக்கு முன்னரோ, பல ஆண்டுகளுக்கு முன்னரோ கூட முதன் முதலில் பதிவாகியிருக்கும். ஆனால், அவையும் அவ்வப்போது டிரெண்ட் ஆகி நம்மை மகிழ்விக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோவைதான் இன்றைய பதிவில் காணவுள்ளோம். 

இயற்கை என்றாலே அதிசயம் தான். இதை பற்றி நாம் புரிந்துகொள்ள ஆசைப்பட்டால், நாம் பல ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் எதிர்கொள்வோம். மனிதர்கள், விலங்குகள், மரங்கள், செடி, கொடிகள், பூச்சிகள், புழுக்கள் என நாம் அனைவரும் இயற்கை அன்னையின் பிள்ளைகளே. நாம் உயிர் வாழ்வதன் சான்றாக மூச்சு விடுகிறோம், பல வித செயல்களில் ஈடுபடுகிறோம். மரங்களும், செடி கொடுகளும், வளர்வதன் மூலம் தங்களது உயிரோட்டத்தை காண்பிக்கின்றன. ஆனால், இயற்கைக்கு உயிர் இருப்பதை அப்படி தெரிந்துகொள்வது. இந்த பூமிக்கு உயிர் உள்ளதா? பூமியும் சுவாசிக்குமா?

பூமியும் மூச்சுவிடும்!! ஆம் அதற்கு சான்றாக ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. அதிசயங்களின் இருப்பிடமாக இருக்கும் பூமி நமக்கு அளிக்கும் ஆச்சரியங்களில் இதுவும் ஒரு ஆச்சரியமாக உள்ளது. இந்த வீடியோவை  பார்த்தால் நம்மால் நம் கண்களையே நம்ப முடியவில்லை. இயற்கை தன்னகத்தே கொண்டுள்ள பல வித வினோதங்களில் இது மிகப்பெரிய வினோதமாக உள்ளது. 

மேலும் படிக்க | மூன்று பாம்புகளை விழுங்கி கக்கும் ராஜநாகம் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ

பூமி மூச்சுவிடும் அதிசய வீடியோவை இங்கே காணலாம்:

பூமி மூச்சுவிடுவதை இந்த வீடியோவில் நன்றாக காண முடிகின்றது. வீடியோவில் பல மரங்கள் அடர்ந்து இருக்கும் ஒரு நிலப்பரப்பை காண்கிறோம். திடீரென்று பலத்த காற்று வீசத் தொடங்குகிறது. அப்போது பூமி சுவாசிப்பது போன்ற காட்சி நம் கண்களுக்கு முன் தோன்றுகிறது. பூமி மேலும் கீழுமாக மொத்தமாக நகர்கிறது. வீடியோவில் பூமி சுவாசிப்பதை கண்கூடாகக் காண முடிகின்றது. இந்த வீடியோ கனடாவின் குயூபெக் பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.. 

இந்த வீடியோ யூடியூப், ட்விட்டர் என பல  சமூக ஊடக தளங்களில் வெளிவந்துள்ளது. நம்ப முடியாத இந்த அற்புதமான காட்சி, ஏதோ ஒரு காட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பழைய வீடியோ. எனினும் இது சமீபத்திய நாட்களில் மீண்டும் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது. 

உண்மை என்ன?

வீடியோவில் காட்டப்பட்டுள்ள இடத்தில் பலத்த காற்று வீசுவதால், மரங்களின் வேர்கள் பலமாக அசைகின்றன. இதன் காரணமாக வேர்களின் மேலுள்ள நிலப்பரப்பும் அசைகின்றது. இது அச்சு அசல் பூமியே சுவாசிப்பது போல் தெரிகிறது. இந்த வீடியோவை முதலில் பார்க்கும் அனைவருக்கும் பூமி மூச்சுவிடுவது போன்றே தோன்றும். இயற்கையின் இந்த அதிசயம் அங்கிருந்த கேமராவில் பதிவாகவே, அது சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்பட்டது. இதைக் கண்டு அசந்துபோன நெட்டிசன்கள் இதை பரப்பி வைரல் ஆக்கி வருகின்றனர். 

மேலும் படிக்க | Viral Video : “காலுக்கு மசாஸ் பண்ணு...” பாகனிடம் செல்லமாக சேட்டை செய்த யானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News