டிவிட்டரில் "மெம்பிஸ்" என்ற வார்த்தையைப் பயன்படுத்திய ட்விட்டர் பயனர்களுக்கு வினோதமான அனுபவம் ஏற்பட்டது. அவர்களின் கணக்குகள் வார இறுதியில் முடங்கின.
"மெம்பிஸ்" என்ற வார்த்தையை பயன்படுத்தி செய்த ட்வீட்கள் கொண்ட கணக்குகள் முடங்கின. டிவிட்டரின் விதிகளை மீறியதற்காக தங்கள் கணக்கு முடக்கப்பட்டதாகக் கூறி பல பயனர்கள் ட்விட்டரின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து கொண்டனர்.
A number of accounts that Tweeted the word “Memphis” were temporarily limited due to a bug. It’s been fixed and the accounts have now been restored. We’re sorry this happened.
— Twitter Support (@TwitterSupport) March 14, 2021
இந்தப் பிழையை ஒப்புக் கொண்ட ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, அது சரி செய்யப்பட்டது என்றும் கூறினார்.
Also Read | சஞ்சனாவுக்கு மூன்று முடிச்சிட்டு திருமண பந்தத்தில் இணைந்தார் Jasprit Bumrah
ஒலிம்பிக் லியோனாய்ஸ் (Olympique Lyonnais) வீரர் மெம்பிஸ் டெப்பாயைக் (Memphis Depay) குறிக்கும் பதிவுகள் தடுக்கப்படுவதை சில கால்பந்து ரசிகர்கள் கவனித்ததை அடுத்து பிழை பற்றிய தகவல்கள் வெளிவந்தன.
பிரெஞ்சு கால்பந்து கிளப் (French soccer club) வீரர்களின் புகைப்படத்தை ட்வீட் செய்தது: "ட்விட்டர் - இவரைப் பற்றி நாம் பேசலாமா?" என்று கேள்வி எழுப்பியது.
மற்றவர்கள் இந்த வெளிப்படையான தடை பற்றிய நகைச்சுவைகளை பகிர்ந்துக் கொண்டனர்.
when bots flood our comments with "say the m word" pic.twitter.com/X1qgsIRmm9
— Memphis Grizzlies (@memgrizz) March 14, 2021
"மெம்பிஸ்" என்ற வார்த்தையை ட்வீட் செய்த பல கணக்குகள் ஒரு பிழை காரணமாக தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டன, " என்று Twitter Support ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
"இது சரி செய்யப்பட்டு, முடக்கப்பட்ட கணக்குகள் இப்போது மீட்டமைக்கப்பட்டுள்ளன. தவறுக்கு மன்னிக்கவும்" என்று டிவிட்டர் தெரிவித்துள்ளது.
சில பயனர்கள் கவனக்குறைவாக இருந்தாலும், ட்விட்டர் ஒரு குறிப்பிட்ட சொல்லை தடை செய்ய முடிந்தது என்பதை உணர்ந்து குறிப்பிட்டனர். வார்த்தைகளை துஷ்பிரயோகம் செய்வதை சிறப்பான முறையில் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சிலர் கேட்டுக் கொடுள்ளனர்.
"ஹலோ ட்விட்டர், நீங்கள் அதை சரிசெய்ததில் மகிழ்ச்சி. தயவுசெய்து நாஜிகளை (Nazis) தடை செய்யுங்கள்" என்று ஒரு பயனர் ட்வீட் செய்துள்ளார்.
Also Read | Honey-Trap: பாகிஸ்தானுக்கு ரகசிய தகவலை கசியவிட்ட ஜவான் கைது
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR