Fake Gift To Trump: என்ன ராஜா! இப்படி பண்றீங்களே!

போலி பரிசுப் பொருட்கள் கொடுப்பதை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு அரச குடும்பம், மற்றொரு நாட்டு அதிபருக்கு போலி பரிசு கொடுக்கும் என்பதை கேள்விப்பட்டதுண்டா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 12, 2021, 07:07 PM IST
  • டிரம்புக்கே போலி பரிசு
  • சவுதி அரேபிய அரசுக் குடும்பம் கொடுத்த பரிசு போலி என உறுதியானது
  • கொடுத்த பரிசு அசலாக இருந்தாலும் டிரம்புக்கு சிக்கல் தான்! காரணம் என்ன?
Fake Gift To Trump: என்ன ராஜா! இப்படி பண்றீங்களே!  title=

2017ஆம் ஆண்டு அன்றைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவூதி அரேபியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணத்தின் போது அவருக்கு விலை உயர்ந்த பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவருடன் வந்த குழுவினருக்கு சிறுத்தை மற்றும் புலித் தோல் அங்கிகளை சவுதி அரச குடும்பம் பரிசளித்தது. சவுதி அரேபியா கொடுத்த பரிசில் என்ன இருந்தன?

"வெள்ளை புலி மற்றும் சீட்டா ரோமங்களால் செய்யப்பட்ட மூன்று அங்கிகள் சிறுத்தையின் யானைத் தந்தத்தின் கைப்பிடி பொருத்தப்பட்ட வாளை பரிசாக அளித்தது தோன்றியது" என்று, சவுதியின் பரிசு குறித்து நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

சவுதியின் பரிசுத் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த வெள்ளை மாளிகை ஆலோசகர் அலுவலகம், இந்த ரோமங்கள் உண்மையானதாக இருந்தால், ஆபத்தான உயிரினச் சட்டம், 1973 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தை மீறும் அபாயம் இருப்பதாக எச்சரித்தது.

Read Also | மனைவிக்கு காதல் பரிசாக சுழலும் வீட்டை உருவாக்கிய 72 வயது கணவர்

டொனால்ட் ட்ரம்ப் தனது அதிபர் பதவியின் இறுதி நாளில், பரிசுப் பொருட்களை பொது சேவைகள் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. ஆனால் இந்த பரிசுகள் அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். 

தற்போது டிரம்பின் பரிசுப் பொருட்கள் இறுதியாக ஆய்வுக்காக சரியான நிறுவனத்திற்குச் சென்றபோது, அவை போலி என்ற விஷயம் வெட்ட வெளிச்சமாகிவிட்ட்து. இருப்பினும், சவுதி அரேபிய அரசக் குடும்பம் கொடுத்த பரிசுகளில் இருந்த ரோமங்கள் உண்மையானவை அல்ல, அவை சாயம் பூசப்பட்டவை என்பது சவுதிக்குத் தெரியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

"வனவிலங்கு ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு முகவர்களின் ஆராய்ச்சியில், சவுதியின் பரிசில் இருந்த புலி மற்றும் சிறுத்தை வடிவங்களை பிரதிபலிக்கும் வண்ணம், பாதுகாக்கப்பட்ட உயிரினங்களுடையது இல்லை" என்று அமெரிக்க உள்துறை செய்தி தொடர்பாளர் டைலர் செர்ரி, நியூயார்க் டைம்ஸிடம் கூறினார்.

Read Also | விருந்துக்கு வந்த புலி! என்ன சாப்பிட்டிருக்கும்? வீடியோ வைரல்

டிரம்புக்கு பரிசாக கொடுக்கப்பட்ட வாளில் உள்ள கைப்பிடியில் "சில வகைகளின் பல் அல்லது எலும்பு இருப்பதாகத் தோன்றுகிறது" என்றும், ஆனால் அவை எந்த இனத்தை சேர்ந்தவை என்பதை உடனடியாக தீர்மானிக்க முடியவில்லை” என்றும் கூறப்பட்டுள்ளது..

டிரம்பின் மருமகன் மற்றும் வெள்ளை மாளிகை ஆலோசகர் ஜாரெட் குஷ்னர், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் நெருங்கிய நட்புக் கொண்டவர். அவருக்கும் பரிசுகள் கொடுக்கப்பட்டன. இரண்டு வாள்கள் மற்றும் ஒரு கத்தி உட்பட பரிசுகளை அவர் சவுதி அரச குடும்பத்திடம் இருந்து பெற்றுக் கொண்டார். அவற்றின் மதிப்பு $ 47,000 க்கும் அதிகமான மதிப்புள்ளதாகும். எனவே, குஷ்னர் அந்தப் பொருட்களுக்கு பதிலாக, அமெரிக்க அரசாங்கத்திற்கு தனது சொந்த பணத்தைக் கொடுத்தார்.  

2020 மேரிலாந்தில் கேம்ப் டேவிட்டில் நடைபெறவிருந்த 7 வது உச்சிமாநாட்டில் வெளிநாட்டு தலைவர்களுக்காக வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பரிசுப் பைகளை ட்ரம்பின் அரசியல் நியமனதாரர்கள் எடுத்துச் சென்றதான குற்றச்சாட்டுகளை வெளியுறவுத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் விசாரிக்கிறார், இந்த உச்சி மாநாடு கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பைகளில் அரசாங்க நிதியுடன் வாங்கப்பட்ட டஜன் கணக்கான பொருட்கள், லெதர் பைகள் மற்றும் அதிபரின் முத்திரை பதிக்கப்பட்ட பளிங்கு டிரிங்கட் பெட்டிகள் இருந்தன.

Also Read | வறுமையில் மக்கள்; ரூ.157 கோடிக்கு ஆடம்பர மாளிகை வாங்கிய ராணுவ மந்திரியின் மகன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News