Viral Video: டாய்லெட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பு... திக் திக் வீடியோ வைரல்!

Snake Viral Video: நீங்கள் காட்டில் அல்லது மிருகக்காட்சிசாலையில் பார்க்கும் பாம்பு உங்கள் வீட்டிற்குள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். பாம்பு என்றால் படையே நடுங்கும் என்னும் போது, உங்களுக்கு நடுக்கம் வராதா என்ன.. அதுவும் டாய்லெட் சீட்டிற்குள் என்றால், சிறிது கதி கலங்கித் தான் போகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 16, 2023, 04:06 PM IST
  • பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
  • வைரலாகி வரும் பாம்பு வீடியோ.
  • கழிப்பறைக்கு செல்லும்போது, ​​​​நாம் பொதுவாக, டாய்லெட் சீட்டிற்குள் பார்க்க மாட்டோம்.
Viral Video: டாய்லெட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பு...  திக் திக் வீடியோ வைரல்! title=

இன்றைய வைரல் வீடியோ: நீங்கள் காட்டில் அல்லது மிருகக்காட்சிசாலையில் பார்க்கும் பாம்பு உங்கள் வீட்டிற்குள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். பாம்பு என்றால் படையே நடுங்கும் என்னும் போது, உங்களுக்கு நடுக்கம் வராதா என்ன.. அதுவும் டாய்லெட் சீட்டிற்குள் என்றால், சிறிது கதி கலங்கித் தான் போகும். ஒருவர் கழிவறைக்குச் செல்லும்போது, ​​அவருக்கு மட்டுமல்ல நமக்கும் அதிர்ச்சியளிக்கும் ஒன்று நிகழ்வதைக் காணொளியில் காணலாம். அவர் கழிவறைக்குள் நுழைந்தவுடனேயே, டாய்லெட் சீட்டில் இருந்து தலையை உயர்த்திய அந்த உயிரினத்தின் மீது அவரது கண்கள் விழுகின்றன. இது வேறொன்றுமில்லை. மிகவும் ஒரு ஆபத்தான பாம்பு. இந்த விஷப் பாம்பை பார்த்து அந்த நபர்  பயத்தில் உரைந்து போகிறார்.

வைரலாகி வரும் வீடியோவில், டாய்லெட் சீட்டில்  இருந்து பாம்பு எப்படி வெளிவருகிறது என்பதை காணலாம். முதலில் பாம்பு டாய்லெட் சீட்டில்  அமைதியாக மறைந்திருக்கிறது. அந்த நபர் கழிவறைக்குள் நுழைந்தவுடனேயே பாம்பு (Snake Viral Video) வெளியே வருகிறது. பாம்பை பார்த்தால், மிகவும் விஷமுள்ள பாம்பு போல் தெரிகிறது.  எப்போதும்  கழிப்பறைக்கு செல்லும்போது, ​​​​நாம் பொதுவாக், டாய்லெட் சீட்டிற்குள் பார்க்க மாட்டோம். அத்தகைய சூழ்நிலையில், ஒரு பாம்பு திடீரென்று அங்கிருந்து வந்தால், என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். பாம்பு உங்களையும் தாக்கலாம். எனவே, நீங்கள் கழிப்பறைக்குச் செல்லும்போதெல்லாம், எச்சரிக்கையுடன் செல்லுங்கள்.

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

 

 

நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: பெரிய கருநாகம் ஒன்றை நூடுல்ஸ் போல் கபளீகரம் செய்யும் கொக்கு!

பாம்புகள் உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன. மேலும் சில ஆன்மீக வழியில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயல்பானது. அதன்படி பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. மேலே காணப்படும் வீடியோ தற்போது வைரலாகி வருவதுடன் சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வைரலான வீடியோவை பல லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ளது மற்றும் ஆயிரக்கணக்கானோர் தங்களின் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.  

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | நாகப்பாம்பை வெச்சு செய்யும் குரங்கு: பீதியுடன் பார்க்கும் நெட்டிசன்ஸ்.. வைரல் விடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News