ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. காட்டுப்பன்றியிடம் பல்பு வாங்கிய புலி: வீடியோ வைரல்

Tiger Viral Video: காட்டில் வாழும் விலங்குகள் எப்போதும் மற்ற விலங்குகளிடமிருந்து தங்கள் உயிரை காப்பாற்றி கொள்கிறது. அது சிங்கமாக இருந்தாலும் சரி புலியாக இருந்தாலும் சரி. அப்படிப் பட்ட ஒரு வீடியோவை தான் நாம் இங்கு காண உள்ளோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 22, 2023, 11:52 AM IST
  • காட்டுப்பன்றிகளுக்கு பயந்து புலி மரத்தில் ஏறியது.
  • இன்றைய வைரல் வீடியோ.
  • இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. காட்டுப்பன்றியிடம் பல்பு வாங்கிய புலி:  வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: காட்டில் வாழும் விலங்குகள் எப்போதும் மற்ற விலங்குகளிடமிருந்து தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளும். அது சிங்கமாக இருந்தாலும் சரி புலியாக இருந்தாலும் சரி. அது சிங்கமாக இருந்தாலும் சரி புலியாக இருந்தாலும் சரி. அப்படிப் பட்ட ஒரு வீடியோவை தான் நாம் இங்கு காண உள்ளோம். இன்று நாம் சமூக ஊடகங்களில் காண உள்ளோம் வீடியோவில், ஒரு புலி சில காட்டுப்பன்றிகளுடன் நேருக்கு நேர் மோதிக் கொள்வதை நாம் காணலாம். இதில் முதலில் காட்டுப்பன்றிகள் புலியை தாக்குகிறது. இதனால் காட்டுப்பன்றியின் தாக்குதலின் பயத்தால் புலி தன் உயிரைக் காப்பாற்ற மரத்தின் மேல் ஏற வேண்டியதாயிற்று. மரத்தில் ஏறினாலும் காட்டுப்பன்றிகள் அங்கிருந்து நகராமல் தொடர்ந்து மரத்தில் ஏற முயன்று வந்தன. ஆனால் அப்போது தான் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடக்கிறது.

காட்டுப்பன்றிகளுக்கு பயந்து புலி மரத்தில் ஏறியது
புலி ஒன்று மரத்தில் ஏறி மீண்டும் மீண்டும் தரையிறங்க முயற்சிப்பதை இந்த வீடியோவில் காணலாம். அதே சமயம் சில காட்டுப்பன்றிகள் மரத்தின் கீழ் இருப்பதையும் நாம் இந்த வீடியோவில் காணலாம், அவை புலிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று தொடர்ந்து மரத்தில் ஏற முயற்சி செய்கின்றன. ஆனால் காட்டுப்பன்றிகளால் அந்த மரத்தில் மேல் ஏற முடியவில்லை. மறுபுறம், புலியும் கீழே இறங்க முயற்சிக்கிறது. ஏனெனில் புலி கீழே இறங்கினால், காட்டுப்பன்றிகள் அனைத்தும் சேர்ந்து அந்த புலியை ஒருவழியாக்கிவிடும், அதாவது கொன்றுவிடும். இந்த பயத்தினால் மரத்தில் இருந்து வராமல் அந்த புலி அங்கேயே இருந்துள்ளது.

மேலும் படிக்க | கீரி பாம்பு சண்டை..கடுப்பில் குழந்தை தொட்டிலில் ஏறிய பாம்பு: வீடியோ வைரல்

காட்டுப்பன்றிகளின் கேவலமாக பல்பு வாங்கும் புலியின் வீடியோவை இங்கே காணுங்கள்

திடீரென மரத்தில் இருந்து குதித்த புலி
இதனிடையே இந்த வீடியோவை கடைசி வரை பார்த்தால் செம டுவிஸ்ட் என்று நீங்களும் கூறுவீர்கள். ஏனெனில் அந்த புலி மரத்தில் இருந்து துணிச்சலுடன் காட்டுப்பன்றிகள் மீது தாவுவதை வீடியோவில் காணலாம். அப்போது தைரியமான அந்த புலி அங்கிருந்த காட்டுப்பன்றி ஒன்றை பிடித்து மரத்தில் இழுத்துச் சென்றது. அதன் பிறகு காட்டுப்பன்றி தனது துணையை காப்பாற்ற கடுமையாக முயற்சித்தாலும் புலி காட்டுப்பன்றியை விடாமல் கொன்று தின்றது.

இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வெகுவாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @animals5s என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News