"மாரி 2": முக்கிய அறிவிப்பை வெளிட்டார் படத்தின் இயக்குனர்!

மாரி 2-ல் தனுஷுடன், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

Last Updated : Jan 1, 2018, 11:16 AM IST
"மாரி 2": முக்கிய அறிவிப்பை வெளிட்டார் படத்தின் இயக்குனர்! title=

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி. 

இதையடுத்து, இப்படத்தின் 2-ம் பாகம் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகியது. இது தொடர்பாக இயக்குனர் பாலாஜி மோகன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மாரி 2 அப்டேட்டினை பகிர்ந்து வருகின்றார்.

மாரி 2-ல் தனுஷுடன், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இந்த மாத இறுதியில் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ லோகோவை நேற்று இரவு 12 மணிக்கு இயக்குனர் பாலாஜி மோகன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில்,

"2017-க்கு நன்றி. 2018-ஐ வரவேற்போம். நம்பிக்கையுடன் புத்தாண்டில் நுழைவோம். இது ஒரு புதிய ஆரம்பம். மாரி 2 படத்தின் லோகோவை வெளியிடுகிறேன். இந்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது" என தெரிவித்துள்ளார்.

 

 

Trending News