வைரல் வீடியோ: மலைப்பாம்புகள் பொதுவாக நச்சுத்தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை ஆகும். இவை பெரும்பாலும் ஆபிரிக்க ஆசியக் கண்டங்களிலேயே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இப்பாம்பின் நிறம் மஞ்சள் அல்லது கருமை கூடிய பழுப்பு கொண்டது. இவை வாழும் நிலப்பரப்பு, வாழ்விடம் பொருத்து இதன் நிறம் சற்று மாறுபடும். மலை காடுகளில் காட்டாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், அசாம் போன்ற மலைப்பகுதிகளில் உள்ள பாம்புகளின் நிறம் கரிய நிறத்துடனும், தக்காண பீடபூமி, கிழக்கு கடற்கரை பகுதிகளில் வாழக்கூடிய இப்பாம்புகள் சற்று வெளிரிய நிறத்தில் இருக்கும்.
அந்த வகையில் இந்த பாம்பு தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இதில் காட்டில் இருந்த சிறுத்தை ஒன்றை மலைப்பாம்பு முறுக்கி வேட்டையாடுவதை நாம் காணலாம். இதற்குப் பிறகு அந்த மலைப்பாம்புக்கு என்ன நடந்ததை என்பதை வீடியோவில் கண்டால் கட்டாயம் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
மேலும் படிக்க | திடீரென கையை கடித்த புலி, அலறிய நபர்: திகிலூட்டும் வைரல் வீடியோ
இந்த நிலையில் தற்போது வைரலாகி வரும் திகிலான வைரல் வீடியோவில், மலைப்பாம்பு தனது இரையை தேடி காட்டில் அலைகிறது, பின்னர் அந்த மலைப்பாம்பு அங்கு வந்த சிறுத்தையை கண்டு அதை வேட்டையாட அதை முறுக்குகிறது. மறுபுறம் அந்த சிறுத்தை தன்னை காப்பாற்றிக்கொள்ள மலைப்பயம்பிடம் மல்லுக்கட்டுகிறது. ஆனால் இறுதியில் அந்த சிறுத்தை போராட முடியாமல் மலைப்பாம்பிற்கு இரையாகிவிடுகிறது.
சிறுத்தையை தாக்கும் மலைப்பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:
கதிகலங்க வைக்கும் இந்த வீடியோ Latest Sightings என்கிற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | நச்சுனு ஒரு கிஸ்ஸூ.. குரங்கிடம் மயங்கிய பூனை: Viral Video
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ