Viral Video: கழுத்தை சுற்றி இறுக்கும் பாம்பு.. பரிதவிக்கும் குரங்கு குட்டி; மனதை பதறச் செய்யும் வீடியோ!

Snake Viral Video: இணைய உலகில், தினம் தினம், நகைச்சுவை, நடனம், வேடிக்கையான நிகழ்வுகள் போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பாம்பு வீடியோக்கள் தான் எளிதில் வைரலாகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 17, 2023, 12:52 PM IST
  • பாம்பு ஒன்றிடம் குரங்கு குட்டி சிக்கிக் கொண்ட வீடியோ
  • பாம்பு ஒன்று குரங்கின் கழுத்தில் சுற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
  • சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வரும் வீடியோ.
Viral Video: கழுத்தை சுற்றி இறுக்கும் பாம்பு.. பரிதவிக்கும் குரங்கு குட்டி; மனதை பதறச் செய்யும் வீடியோ! title=

சமூக ஊடக உலகத்தில் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். தினமும் எண்ணிலடங்காத வீடியோக்கள், தகவல்கள் பகிரப்படுகின்றன. அதில் தினமும்,  நம்மை வியப்பை அளிக்கக் கூடிய, அல்லது அதிர்ச்சி அளிக்கக்கூடிய அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகின்றன. இணைய உலகில், தினம் தினம், நகைச்சுவை, நடனம், வேடிக்கையான நிகழ்வுகள் போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பாம்பு வீடியோக்கள் தான் எளிதில் வைரலாகும்.  பாம்பு விலங்குகள் மீது நடத்தும் தாக்குதல் பாம்பு வேட்டைகள்,  பாம்பு கீரி சண்டைகள் போன்ற வீடியோக்களை ஏராளமானோர் பார்க்கின்றனர். 

இணைய உலகத்தில் காட்டு விலங்குகள், பறவைகள் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அதிலும் பாம்புகளின் வீடியோக்கள் மிகவும்  அதிகம். பாம்பு என்றாலே படையும் நடுங்கும். இருப்பினும், பாம்பு வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவாக உள்ளது. இவை சில சுவாரஸ்யமாகவும் சில சமயம் திகிலாகவும் இருப்பதால் மக்கள் அதிக அளவில் இதனை பார்க்க விரும்புகிறார்கள். 

இந்நிலையில், பாம்பு ஒன்றிடம் குரங்கு குட்டி சிக்கிக் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் மிகவும் வைரலாகியுள்ளது.  பாம்பு, குரங்கு குட்டி ஒன்றின் கழுத்தை இறுக்கிக் கொண்டிருப்பதை வீடியோவில் காணலாம்.  பாவம் குரங்கும்அதனிடம் இருந்து தப்பிக்க முடியாமல் தோற்றுப் போகிறது. சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 

இணையத்தில் வெளியான வீடியோவை பார்த்தால் அதில் ஒரு  பாம்புகுரங்கை இறுக்கி பிடித்திருந்த நிலையில், யாரோ ஒருவர் அதனை காப்பாற்றுவதையும் காணலாம். வீடியோவில் பாம்பிடம் சிக்கிய குரங்கு ஒன்று அதிர்ஷ்டவசமாக யாரோ ஒருவரால் காப்பாற்றப்படுகிறது. காப்பாற்றப்பட்டவுடன், அது அந்த நபரின் மடியின் அமர்ந்திருக்கும் போது கூட அதன் உடல் நடுங்குவதையும் காணலாம். இது அதிக அளவிலான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்றுள்ளது. சமூக ஊடக பயனர்கள் இதை மிகவும் ஆர்வமாக பார்க்கின்றனர். 

சில நாட்களுக்கு முன், இதற்கு நேர்மாறாக தவளை ஒன்று பாம்பை கபளீகரம் செய்யும் வீடியோ ஒன்றும் வைரலானது. சுமார் 2 நிமிடங்கள் நீடித்த அந்த வீடியோ ஒரு திரில்லர் படம் பார்ப்பதைப் போல் இருந்தது. இந்த வீடியோவில் தவளை மெதுவாக பாம்பை ரசித்து ருசித்து பாம்பை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதைக் காணலாம். பொதுவாக, பாம்பு என்றால் படையே நடுங்கும். விலங்குகளில் பலவும் கூட பாம்பை சீண்டி பார்க்கும் தைரியத்தை கொண்டிருப்பதில்லை. பாம்பின் பெயரை கேட்டால் எட்டாத தூரம் ஓடும் மனிதர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கே தவளை ஒன்று பாம்பை சர்வசாதாரணமாக விழுங்குவதை பார்த்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம். 

மேலும்  படிக்க |  கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!

சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News