SeePics: தீரன் சின்னமலை அவர்களுக்கு தலைவர்கள் மரியாதை!

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 213-வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்!

Last Updated : Aug 3, 2018, 01:01 PM IST
SeePics: தீரன் சின்னமலை அவர்களுக்கு தலைவர்கள் மரியாதை! title=

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 213-வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்!

ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த தீரன் சின்னமலை அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 17.4.1756-ல் பிறந்தார். ஆங்கிலேயரை அடியோடு அழிக்க திப்பு சுல்தானுடன் கைகோர்த்து போரிட்டவர். 

தீரன் சின்னமலை அவர்களை போரில் வெல்ல முடியாது ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து அவரைக் கைது செய்து, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி தூக்கிலிட்டனர். 

தீரன் சின்னமலை அவர்களை தூக்கிட்ட நாளான இன்று அவரது 213-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை கிண்டியில் இருக்கும் அவரது சிலைக்கு தலைவர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Trending News