புலி குட்டியுடன் கொஞ்சி விளையாடும் GV, வைரலாகும் Video!

இளம் இசையமைப்பாளர் GV பிரகாஷ் குமார் புலியுடன் புகைப்படம், வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 3, 2019, 09:48 AM IST
புலி குட்டியுடன் கொஞ்சி விளையாடும் GV, வைரலாகும் Video! title=

இளம் இசையமைப்பாளர் GV பிரகாஷ் குமார் புலியுடன் புகைப்படம், வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்!

இசையமைப்பாளரும், நடிகருமான GV பிரகாஷ் குமார், சமீப காலமாக ட்விட்டரில் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார். சமூக பிரச்சனைகள் குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது தான் புலியுடன் நேரத்தை செலவிட்ட தருணத்தினை புகைப்படம், வீடியோ வடிவில் இணையத்தில் பகிர்ந்துள்ளார். புலி தன் உணவை பதம் பார்க்கும் அதே வேலையில் GV, புலிக்கு முன்னதாக தனது செல்ஃபி திறமையினை வெளிகாட்டியுள்ளார்.

GV பிரகாஷ் ரசிகர்கள் ஒருபுறம் அவரை பாராட்ட, சிலர் அவரின் மீது அக்கறை கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.

முன்னதாக காலையில் புலியுடன் இருக்கும் புகைப்படத்தினை காலை வணக்கத்துடன் வெளியிட்ட GV, மாலையில்., புலியுடன் இருக்கும் வீடியோவினை மாலை வணக்கத்துடன் வெளியிட்டுள்ளார். ஆக முழு நாள் புலியுடன் GV நேரம் செலவிட்டிருப்பது இதன் மூலம் தெரியவருகிறது.

Trending News