மும்பை கனமழைக்கு மத்தியில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த நபரை ஸ்விக்கி வலை வீசி தேடி வருகிறது. அந்த நபர் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு ரூ. 5,000 பரிசு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்விக்கி நிறுவனம் உணவகங்களில் இருந்து உணவை வாங்கி அதை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் சேவையை செய்து வருகிறது.
மும்பையில் பெய்து வரும் மழைக்கு மத்தியில் ஸ்விக்கி டெலிவரி மேன் ஒருவர் குதிரையில் சவாரி செய்து உணவு வழங்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஸ்விக்கி ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. தங்களால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவரை கண்டிபிடித்து தருபவருக்கு ரூ. 5,000 வெகுமதி அளிக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு காருக்குள்ளிருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. கடுமையான மழைக்கு மத்தியில் ஸ்விக்கி பையில் உள்ள உணவை ஒரு நபர் குதிரையில் டெலிவரி செய்யும் வீடியோ அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, ஸ்விக்கி இதைப் பற்றி பதிவிட்டுள்ளது.
மேலும் படிக்க | குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த 'swiggy' ஊழியர்! வைரல் ஆகும் வீடியோ!
இந்த வீடியோ வைரல் ஆனது முதல் ஸ்விக்கி நிறுவனத்துக்கு பல பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இதன் மூலம் ஸ்விக்கிக்கு நல்ல பெயரும் விளம்பரமும் கிடைத்துள்ளது. ஸ்விக்கி இதற்கு வேடிக்கையான மற்றும் வித்தியாசமான முறையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது பற்றி கூறிய ஸ்விக்கி, “நெட்டிசன்கள் மற்றும் உணவுப் பிரியர்கள் கவனத்திற்கு. அடையாளம் அறியப்படாத நபர் ஒருவர், ஒரு வெள்ளைக் குதிரையில் மிகவும் நம்பிக்கையுடன் அமர்ந்து, எங்கள் மோனோகிராம் செய்யப்பட்ட டெலிவரி பையை எடுத்துச் செல்லும் சமீபத்திய அமெச்சூர் வீடியோ எங்கள் கவனத்துக்கு வந்துளது. அந்த நபரை அடையாளம் காண உதவி செய்பவருக்கு ரூ. 5,000 வெகுமதி அளிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது” என்று ஸ்விக்கி குறிப்பிட்டுளது.
Let's address the horse in the room pic.twitter.com/fZ2ci49GJ0
— Swiggy (@Swiggy) July 5, 2022
குதிரையில் அமர்ந்து ஸ்விக்கி உணவு டெலிவரி செய்யும் நபரின் அந்த வீடியோ இணையவாசிகளுக்கு இடையே பல வித ரியாக்ஷன்களை ஏற்படுத்தியது. அவரது கடமை உணர்ச்சியை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் சிறு நகரங்களிலும் உணவு டெலிவரி சேவைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன. இன்றைய வேகமான வாழ்க்கை முறைக்கு இந்த உணவு வழங்கல் தளங்கள் மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
மேலும் படிக்க | Love You Maa: அம்மாவுக்கு பிறந்த நாள்! மகன் செய்த காரியத்தை பாருங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ