ஏர்போர்ட்டில் தானாக நகர்ந்த சூட்கேஸ்..பேயா?

விமான நிலையத்தில் லக்கேஜ் ஒன்று தனியாக நீண்ட தூரம் நகர்ந்து கொண்டே சென்ற வேடிக்கையான வீடியோ ஒன்று இணையத்தை வட்டமடித்து வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 9, 2021, 07:21 PM IST
ஏர்போர்ட்டில் தானாக நகர்ந்த சூட்கேஸ்..பேயா? title=

அமெரிக்கா:  விமான நிலையத்தில் லக்கேஜ் ஒன்று தனியாக நீண்ட தூரம் நகர்ந்து கொண்டே சென்ற வேடிக்கையான வீடியோ ஒன்று இணையத்தை வட்டமடித்து வருகிறது. பொதுவாக அசாதாரண நிகழ்வுகள் சீக்கிரம் மக்களின் மத்தியில் பிரபலமடைந்து விடுவது வழக்கம்.  விமான நிலையத்தில் சூட்கேஸ் யாராவது திருடி கொண்டு போகும் சம்பவம் நடந்திருக்கலாம்.  அதுவே சூட்கேஸை யாரும் எடுக்காமல், அது தனியாக மனிதர்கள் செல்வது போல் செல்லும் நிகழ்வை இதுவரை யாரும் பார்த்துள்ளீர்களா? ஆம், அப்படியொரு வியப்பான சம்பவம் தான் அரங்கேறியுள்ளது.

ALSO READ | மணமக்களை அதிரவைத்த பிராங்க்! இணையவாசிகளை கவர்ந்த வீடியோ!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏர்போர்ட் ஒன்றில் சூட்கேஸ் ஒன்று தவறுதலாக கீழே விழுந்து விமான பாதையின் ஓடுதளத்தில் எவ்வித துணையும் இல்லாமல் நேர்கோட்டில் ஓடிக்கொண்டு இருக்கின்றது.  இந்த நிகழ்வு விமான நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு ஆச்சர்யமூட்டும் வகையில் அமைந்தது.

 

மேலும் நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கும் அந்த சூட்கேஸிற்கு முன்னே பல வாகனங்கள் வந்து கொண்டிருக்க, அதன் எதிரே ட்ரக் ஒன்று வேகமாக வருகிறது, இதனை பார்த்த பயணிகள் சூட்கேஸ் நிலைமை என்னாகும் என்று கண்களை விரித்தபடி பார்த்து கொண்டிருக்க ஆனால் அந்த ட்ரக்கில் சிக்காமல் சூட்கேஸ் தப்பித்தது, இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள், கரகோஷம் எழுப்பினர்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ | தாயை பார்த்து "ஹாட்" என கூறிய சிறுவன் ! வைரல் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News