'Desh Ka Sach' - சுபாஷ் சந்திரா அறக்கட்டளையின் மனு மேடை!

சாமானியரின் குறைகளை கேட்டறிந்து, அதன் மீது தனி கவனம் எடுக்கும் விதமாக சுபாஷ் சந்திரா அறக்கட்டளையானது 'Desh Ka Sach' என்னும் பிரத்தியேக மனு மேடை வலைப்பக்கத்தினை உருவாக்கியுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 2, 2018, 09:01 PM IST
'Desh Ka Sach' - சுபாஷ் சந்திரா அறக்கட்டளையின் மனு மேடை! title=

சாமானியரின் குறைகளை கேட்டறிந்து, அதன் மீது தனி கவனம் எடுக்கும் விதமாக சுபாஷ் சந்திரா அறக்கட்டளையானது 'Desh Ka Sach' என்னும் பிரத்தியேக மனு மேடை வலைப்பக்கத்தினை உருவாக்கியுள்ளது!

பொதுமக்களின் குறைகளை குறித்த மனுமீது 10,000-க்கும் அதிகமான கையெழுத்துக்களைப் பெற்று அதனை உரிய அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் திட்டம் இது என சுபாஷ் சந்திரா அறக்கட்டளையின் (SACH) நிறுவனர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இத்திட்டத்தினை காந்தி ஜெயந்தி நாளான இன்று அறிமுகம் செய்வது தான் சரி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் கண்முன் நிகழும் பிரச்சனைகளை களைய தங்களால் ஆன சிறு முயற்சிகளை முன்னெடுத்து தான் வருகின்றனர். அத்தகைய குடிமகனுக்கு உதவும் வகையில் இன்று மாலை SACH அறக்கட்டளையால் அறிமுகம் செய்யப்பட்டதா தான் Desh Ka Sach (www.deshkasach.in). இந்த வலைப்பக்கத்தின் மூலம் இந்நாட்டின் பிரஜை பொதுமக்களின் குறையினை குறிப்பிட்டு, பிறரது கவனத்திற்கு கொண்டு செல்லாம். ஆன்லைன் முறையில் செயல்படும் இந்த மனுவினை பிறரும் கையெழுத்திட்டு பகிர்வர்.

சுமார் 10000 கையொப்பங்களை இக்கடிதம் பெற்ற பின்னர், இந்த மனுவானது உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு SACH அறக்கட்டளையால் கொண்டு செல்லப்படும்.

இதுகுறித்து சுபாஷ் சந்திரா தெரிவிக்கையில்... தீர்வு காண பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் எனில், சமூக ஊடகங்களின் உலகில், வெகுஜன மக்களின் ஆதரவை திரட்டுவது பயனளிக்கும் என்று நம்புகின்றேன். இந்த என்னத்தின் செயல்பாடே இந்த Desh Ka Sach. 

இந்த மனுவானது ரயில்களில் இருக்கும் பிச்சைக்காரர்களின் நிலையில் மாற்றம் என்பதில் துவங்கி கல்லூரிகளில் வசூளிக்கப்படம் நன்கொடை, அசாதாரன இறப்புக்கள், கிரிமினல் அலட்சியம், பெண்கள் மீதான துன்புறுத்தல், நுகர்வோர் புகார்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் என அனைத்திலும் நல்திசை நோக்கிய தீர்வு கொண்டுவரும் என உறுதியாக நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

எப்படி Desh Ka Sach செயல்படுகிறது:-

படி 1: மனு ஒன்றை உருவாக்குதல்...

முக்கியத்துவம் வாய்ந்த சிக்கல் அல்லது ஒரு பிரச்சனையின் விவரங்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்யவேண்டும். (படங்களுடன் கூடிய விளக்கத்தை அளிப்பது நல்லது)

படி 2: கையொப்பங்களை சேகரித்தல்...

மீளாய்வு செய்யப்பட்ட பின், உங்கள் விண்ணப்பம் www.deshkasach.in இல் நேரடியாக சென்றுவிடும். நீங்கள் இந்த பக்கத்தைப் பகிர்ந்து கொள்ளலாம், மேலும் மக்களின் ஆதரவு கோரி பரப்பலாம்.

படி 3: முன்னோக்கி எடுத்துச்செல்லுதல்...

10,000 கையெழுத்துக்கள் என்னும் மைல்கல்லை இந்த படிவம் கடந்ததும், அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்லப்படும். அதாவது தங்கள் விண்ணப்பம் தகுதியுடையதாக இருக்கும் பட்சத்தில் அதன்மீது சுபாஷ் சந்திரா அவர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்தி அதனை உரிய அதிகாரிகளிடன் கொண்டுச் சென்று தேவையான தீர்வினை பெற்று தருவார்.

Trending News