என்னதான் லவ் இருந்தாலும் இப்படியா!! மணமகன் செய்கையால் ஷாக் ஆன மணமகள், வைரல் வீடியோ

Funny Wedding Video: மணமகன் ஒருவர் தன் மணமகளுக்காக மணமேடையிலேயே செய்த செயலின் வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 27, 2023, 11:58 AM IST
  • இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'witty_wedding' என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோவுக்கு 2.7 மில்லியன் வியூஸ்களும் 292K லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள்.
என்னதான் லவ்  இருந்தாலும் இப்படியா!! மணமகன் செய்கையால் ஷாக் ஆன மணமகள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இந்நாட்களில் திருமணங்களில் தம்பதிகள் தங்கள் அன்பை பல விதங்களில் காட்டுவதை நாம் காண்கிறோம். திருமண ஜோடிகள் மற்றும் திருமணங்களில் நடக்கும் பல நிகழ்வுகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. திருமண ஜோடிகள் சில சமயம் தங்கள் அன்பு மிகுதியால் திருமண மேடையிலேயே பல வித செயல்களை செய்கிறார்கள். 

சில சமயம் இவர்கள் ஜோடியாக அழகான நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால், தற்போது மணமகன் செய்யும் ஒரு வித்துயாசமான செயலின் வீடியோ வெளியாகியுள்ளது. 

மாப்பிள்ளை மணப்பெண் முன்னால் செய்த காரியம்

மணமகன் தனது மணமகளின் அழகில் மிகவும் மயங்கிவிட்டார் என்பது வீடியோவை பார்த்தால் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அவர் உடனடியாக திருமண மேடையிலேயே மணமகளுக்கு ஒரு அழகான செயலைச் செய்கிறார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், மணமக்கள் இருவரும் ஒன்றாக மேடையில் நேருக்கு நேர் நிற்பதை காண முடிகின்றது. மணமகன் தனது கையில் ஒரு கருப்பு துணியைப் பிடித்து மணமகளின் முன் சுழற்றுவதைக் காண முடிகின்றது. மணமகன் இப்படி ஒரு செயலை செய்வார் என மணப்பெண் நினைக்கவில்லை. ஆகையால் தன் மீது தன் கணவனுக்கு உள்ள அன்பை பார்த்து வியந்து, மணமகள் மணமகனை மிக ஆசையுடன் பார்க்கிறார். 

மேலும் படிக்க | எருமை மாட்டிடம் எகத்தாளம் பண்ணி நபருக்கு நேர்ந்த கதிய நீங்களே பாருங்க..! வீடியோ

அழகான அந்த திருமண வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'witty_wedding' என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு 2.7 மில்லியன் வியூஸ்களும் 292K லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். வீடியோவில் மணமகன் செய்த அழகான சைகையை நெட்டிசன்கள் கவனித்தனர். இந்த இதயத்தைத் தொடும் சைகையைப் பார்த்து, மற்ற பயனர்களும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர். இந்த அபிமான ஜோடியைப் பார்த்து மகிழ்ந்த பயனர்கள் கமெண்ட் செக்‌ஷனை நிரப்பி வருகிறார்கள். "எல்லா பெண்களுக்கும் இது போன்ற கணவர் கிடைக்கவேண்டும்” என ஒரு பயனர் எழுதியுள்ளார். "மணமகள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவருக்கு ஒரு அன்பான கணவர் கிடைத்துள்ளார்.” என மற்றொரு பயனர் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க | மான்கள் சாப்பிட குரங்கு என்ன செஞ்சுது பாருங்க: இணையவாசிகளை அழ வைத்த வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News