மலைப்பாம்பை வேட்டையாடும் முதலை - பதைபதைக்க வைக்கும் வீடியோ

தண்ணீர் குடித்துச் செல்லும் மலைப்பாம்பை முதலை லாவகமாக வேட்டையாடும் வீடியோ காண்போரை பதைபதைக்க வைக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 7, 2022, 02:19 PM IST
  • மலைப்பாம்பை வேட்டையாடும் முதலை
  • கணப்பொழுதில் விழுங்கிவிடுகிறது
  • பதைபதைக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்
மலைப்பாம்பை வேட்டையாடும் முதலை - பதைபதைக்க வைக்கும் வீடியோ title=

காட்டில் நடைபெறும் வேட்டைகள் காணக் கொடூரமாக இருக்கும். அன்றாட உணவுகளுக்கு வேட்டை தான் ஒரே வழி என விலங்குகளுக்கு படைக்கப்பட்டிருக்கும் விதியால் அவை நாள்தோறும் ஏதேனும் ஒரு விலங்கை வேட்டையாடி உண்ணுகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் நிறைய இருந்தாலும் அவ்வப்போது புதியதாக வெளியாகும் வீடியோக்கள் வைரல் லிஸ்டில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். 

மேலும் படிக்க | மழையில் மஜாவாக விளையாடும் யானைக்குட்டியின் அழகான வீடியோ!

இப்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் முதலை ஒன்று மலைப்பாம்பை லாவகமாக வேட்டையாடி கொன்று சாப்பிடுகிறது. சில நொடிகளில் அரங்கேறும் இந்த வேட்டை, காண்போரை பதைபதைக்க வைக்கிறது. அந்த வீடியோவில், வனப்பகுதியில் இருக்கும் மலைப்பாம்பு ஒன்று தண்ணீர் குடித்துவிட்டு திரும்புகிறது. தண்ணீருக்குள் இருக்கும் முதலை பாம்பின் அசைவுகளை உண்ணிப்பாக கவனித்து அது மீண்டும் திரும்பும் வேளையில் தண்ணீரில் இருந்து மேலெழும்புகிறது. அப்போது, உடனடியாக பாம்பின் வால் பகுதியை பிடித்து வசமாக கடித்துக் குதற, பாம்பு தப்பிக்க நொடிப்பொழுதில் திரும்பி சீறுகிறது. 

ஆனால், முதலை சரியாக வேட்டையாடிவிட்டதால், தண்ணீரில் அங்கும் இங்கும் பாம்பை சுழற்றி அடித்து விழுங்கிவிடுகிறது. பாம்பை கடித்து சாப்பிடும் சத்தம் முதற்கொண்டு அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைத்துவிடுகிறது. டிவிட்டரில் மட்டும் சுமார் 12 ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த வீடியோவுக்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், பார்க்கவே மிகவும் பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இன்னொருவர், நூடுல்ஸ் சாப்பிடுவதுபோல் பாம்பை முதலை சாப்பிடுவதாக தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | Viral Video: தரையிறங்கிய போது துள்ளி குதித்த ஹெலிகாப்டர்; பீதியில் ஓடிய மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News